ரூ.35-க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம்! 8,739 ரேஷன் கடைகளில் விற்பனை..
வெளிச்சந்தையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, மோசமான வானிலை மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 4, 2026: வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70 வரை உயர்ந்துள்ள நிலையில், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.35-க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாய விலைக் கடைகள், கூட்டுறவு மொத்த விற்பனை மையங்கள் மற்றும் அங்காடிகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும்.
அதிகரிக்கும் வெங்காயம் விலை:
வெளிச்சந்தையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, மோசமான வானிலை மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் தமிழக அரசு 1,000 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது.
மேலும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
நியாய விலை கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை:
சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை நியாய விலைக் கடையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கட்ராமன், மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகக் கனவு.. புனித ஜார்ஜ் கோட்டை முதல் ஓமந்தூரார் வரை.. தோன்றி மறைந்த வரலாற்றுப் பின்னணி!!
வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என திமுக மூத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.