AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை… இயக்குநர் பி.எஸ்.மித்திரன்

Director PS Mithran talks about Irumbu Thirai movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இரும்புத் திரை படம் குறித்துப் பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை… இயக்குநர் பி.எஸ்.மித்திரன்
இரும்புத்திரைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Sep 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இயக்குநர் பிஎஸ்.மித்திரன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் வெளியீடு வருகின்ற 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு உள்ளது. படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படக்குழு ஒவ்வொரு ஊரிற்கும் சென்று படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டும் இன்றி படக்குழுவினர் தொடர்ந்து பேட்டிகளையும் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பி.எஸ்.மித்திரன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சர்தார் 2 மற்றும் அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் தொடர்பான சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் அவர் இயக்குநராக அறிமுகம் ஆன இறும்புத்திரை படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவர் முதல் சாய்ஸ் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை:

அதன்படி பி.எஸ்.மித்திரன் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, இரும்புத்திரை படத்தில் விஷால் இணைவதற்கு முன்பாக, அப்படத்தின் கதை முதலில் மாதவனிடம் கூறப்பட்டதாக இயக்குநர் பி.எஸ். மித்ரன் தெரிவித்துள்ளார். திரைக்கதையின் முதல் பாதியை விரும்பிய மாதவன், அதில் ஒரு சிறிய திருத்தத்தைச் செய்யுமாறு பரிந்துரைத்தார்; அதற்குக் கூடுதல் மாற்றங்களைச் செய்யவும் மித்ரன் தயாராக இருந்தார். இருப்பினும், படத்தின் இரண்டாம் பாதி மாதவனுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. இதனாலேயே அவர் ‘இரும்புத்திரை’ படத்தில் நடிக்கவில்லை. பின்னர் விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது என்றுட் தெரிவித்துள்ளார்.

Also Read… விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள் – வைரலாகும் போட்டோஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா சாருடன் நடிக்கும் போது தயக்கமும் பதற்றமும் இருந்தது – நடிகை கயாடு லோஹர்

Follow Us