Kavin: தனது ரெட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த பிக் பாஸ் கவின்.. அவரே வெளியிட்ட பதிவு!
Kavin & Monica Welcome Twins: தமிழில் பிரபல நடிகராக இருந்துவருபவர் கவின். இவருக்கு சமீபத்தில் ரெட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், தற்போது அந்த குழந்தைகளுக்கு பெயர் சூடியதாக பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தனது குழந்தைகளின் கால் புகைப்படங்களை பகிர்ந்து, தனது குழந்தைகளின் பெயரையும் அறிவித்துள்ளார்.
தமிழில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் நெருக்கமானவர் நடிகர் கவின் ராஜ் (Kavin raj). இவர் ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் சீரியல் (Kana Kaanum Kaalangal) மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார். இதற்கு பின் சினிமாவில் நாயகனாக நடிக்க தொடங்கிய நிலையில், தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹாய் (Hi). இந்த படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் கவின் இணைந்து ஜோடியாக நடித்திருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட இரு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
மேலும் நடிகர் கவின் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியில், மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு, கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியில் ரெட்டை குழந்தை பிறந்திருந்தது. இதற்கு பல்வேறு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்திருந்தனர். தற்போது தனது ரெட்டை குழந்தைகளின் பெயரை கவின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவின் 50-வது பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
தனது ரெட்டை குழந்தைகளின் பெயரை அறிவித்த கவின்:
நடிகர் கவினுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு குழந்தைகள் பிறந்த நிலையில், தனது பெண் குழந்தைக்கு “தியோலினா கவின்” என்றும், மகனுக்கு “தியோன் லியோ கவின்” என்றும் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனது குழந்தைகளில் பாத புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். மேலும் கவின் பகிர்ந்த எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஐ அம் கேம் முதல் இம்மார்டல் வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
தனது ரெட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்தது தொடர்பாக கவின் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
இறைவனுக்கு நன்றி 🙏🏼
எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் என்றும், தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.
Theolina Kavin
Theon Leo Kavin🙂 ♥️ pic.twitter.com/5heRRiSKgz
— Kavin (@Kavin_m_0431) September 3, 2026
கவின் தற்போது இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில், பேர் சொல்லும் பிள்ளை என்ற படத்திலும், கனா காணும் காலங்கள் இயக்குநர் கென் ராய் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் கவின் நடித்துவருகிறார். மொத்தமாக இரு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



