AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kavin: தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் கவினுடன் இணைத்த சஞ்சனா.. டைட்டில் இதுவா?

Per Sollum Pillai Movie Shoot Begins: கவினின் கடந்த 2025ம் ஆண்டு பிறந்தநாளோடே, இயக்க தண்டட்டி பட இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புது படத்தில் அடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று (26/06/2026) பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Kavin: தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் கவினுடன் இணைத்த சஞ்சனா.. டைட்டில் இதுவா?
பேர் சொல்லும் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jun 2026 15:08 PM IST

கோலிவுட் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வந்த நடிகர்கள் மத்தியில், இளம் நடிகராக தொடர்ந்து படங்களில் நடிப்பவர் கவின் ராஜ் (Kavin Raj). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இதுவரையில் மொத்தம் 6 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது என கூறலாம். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம்தான் மாஸ்க் (Mask). இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்க, இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரித்திருந்தார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தக்க நயன்தாராவின் தயாரிப்பில் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் ஹாய் (Hi) என்ற படத்திலும் நடித்துவந்தார். கிராமத்து பின்னணி கதையில் இவர் இணைந்த புத்த இயக்குநர்தான் ராம் சங்கையா (Ram Sangaiah). இவர் கடந்த 2023ம் ஆண்டில் பசுபதி மற்றும் ரோகிணி இணைந்து நடித்திருந்த தண்டட்டி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கவினை வைத்து புது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025ம் ஆண்டிலே வெளியான நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் பூஜைகளுடன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: லால் சலாம் படத்தில் நடிக்க இதுதான் காரணம் – விஷ்ணு விஷால்

கவினின் புது படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

கவின் மற்றும் சஞ்சனா நடிக்கும் புது அட டைட்டில்:

இயக்குநர் ராம் சக்கையா இயக்கும் படத்தில் கவின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்துவருகிறார். இப்படமானது கிராமத்தின் பின்னணி கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், ஷூட்டிங் இன்று (26/06/2026) தொடங்கியுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு படக்குழு பேர் சொல்லும் பிள்ளை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

பேர் சொல்லும் பிள்ளை என்ற டைட்டிலில், கடந்த 1987ம் ஆண்டில் கமல்ஹாசன் மற்றும் ராதிகா இணைந்து நடித்திருந்த படத்திற்கே வைக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது ராம் சங்கையா இயக்கம் புது படத்திற்கும் கே டைட்டில் வைக்கப்பட்டுள்ளதது. கவினின் பேர் சொல்லும் பிள்ளை பட ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (26/06/2026) தொடங்கியுள்ளது. இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்க, சஞ்சனா நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படமானது முழுக்க கிராமத்து ஆக்ஷன் பின்னணி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us