AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விண்ணில் சீறிப்பாய்ந்த GSLV-F17 ராக்கெட்.. வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்..

இந்த ஏவுதிட்டம் GSLV ராக்கெட்டின் 19-வது பயணமாகும். EOS-05 செயற்கைக்கோள், பூமியை நிகழ்நேரத்திற்கு மிக அருகில் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், GSLV ராக்கெட் மூலம் GTO அல்லது துணை-GTO சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் சீறிப்பாய்ந்த GSLV-F17 ராக்கெட்.. வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Sep 2026 07:28 AM IST

செப்டம்பர் 4, 2026: ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே EOS-05 செயற்கைக்கோள், திட்டமிடப்பட்ட துணை புவிநிலை மாற்று சுற்றுப்பாதையில் (Sub-Geosynchronous Transfer Orbit) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்:


இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறுகையில், GSLV-F17 ராக்கெட் EOS-05 செயற்கைக்கோளை திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகவும் துல்லியமாகவும் நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஏவுதிட்டம் GSLV ராக்கெட்டின் 19-வது பயணமாகும். EOS-05 செயற்கைக்கோள், பூமியை நிகழ்நேரத்திற்கு மிக அருகில் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், GSLV ராக்கெட் மூலம் GTO அல்லது துணை-GTO சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவின் 7.8% வளர்ச்சியால் பிரதமர் மோடி மகிழ்ச்சி.. சாதனை சாத்தியமானது எப்படி?

சிறப்பம்சம் என்ன?

பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருந்து இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை துல்லியமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்க முடியும்.

51.7 மீட்டர் உயரம் கொண்ட GSLV-F17 ராக்கெட், 420.5 டன் எடை கொண்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள ஏவுவாகனங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க: இமயமலையில் என்ன நடக்குது? ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்!

இதனிடையே, EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். புவிநிலை சுற்றுப்பாதையில் இருந்து பல்வேறு அலைநீளங்களில் மேம்பட்ட புவி கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன செயற்கைக்கோள் EOS-05 என அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் 6 விண்வெளி ஏவுதிட்டங்கள் – இஸ்ரோ தலைவர்:

மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா விண்கலப் பயணத்தை இந்த ஆண்டுக்குள் செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாகவும் முறையாகவும் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் வழிகாட்டி செயற்கைக்கோளான NVS-03 உள்ளிட்ட மேலும் 6 விண்வெளி ஏவுதிட்டங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us