தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள 'டிஎச்எல் மைதானத்திற்கு' மேல், 'ஏர்லிங்க்' நிறுவனத்தின் இரண்டு 'எம்ப்ரேயர் ஈ-ஜெட்' பயணிகள் விமானங்கள் மேற்கொண்ட பிரமிக்க வைக்கும் வான்வழிப் பறத்தல் சாகசம், தற்போது பாதுகாப்பு குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முக்கிய விளையாட்டுப் போட்டி ஒன்றின் தொடக்கமாக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்திற்கு மேலே ஏர்லிங்க் நிறுவனத்தின் இரண்டு பயணிகள் விமானங்கள் மிக அருகருகே அணிவகுத்துச் சென்றன. இந்த கண்கவர் காட்சியின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்ற போதிலும், விமானப் போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் சில பார்வையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விமானங்கள் மைதானத்தின் கூரைக்கு மிகக் குறைந்த உயரத்தில் பறந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.