AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Immortal Movie Ticket Booking Open Now | நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இம்மார்டல். இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
இம்மார்டல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2026 11:17 AM IST

தமிழ் சினிமாவில் குழந்தையாக இருக்கும் போதே பாடகராக அறிமுகம் ஆனார் ஜிவி பிரகாஷ் குமார். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா ஏ.ஆர்.ரிஹானாவின் மூத்த மகன் தான் ஜிவி பிரகாஷ் குமார். இவர் குழந்தையாக இருக்கும் போதே அவரது மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில பாடல்களைப் பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து இசை மீது இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து இசையை முறையாக கற்றுக்கொண்டு பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இவர் இசையமைப்பாளராக சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் போது தொடர்ந்து நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் படங்களில் பணியாற்ற தொடங்கினார். தொடர்ந்து இசையமைப்பது மட்டும் இன்றி நாயகனாகவும் பணியாற்றி வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் தற்போது இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இம்மார்டல். முதலாவதாக வெளியான ஹேப்பி ராஜ் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவதாக இந்த இமார்டல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் மாரியப்பன் சின்ன எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து உள்ளார்.

ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது:

மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் படம் வருகின்ற 04-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நடிகர்கள் விஜய் – அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை நமிதா

இம்மார்டல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Dharman: தர்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இயக்குநர் அஸ்வத்.. உண்மை என்ன?

Follow Us