AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர்கள் விஜய் – அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை நமிதா

Namitha talks about famous actors | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமிதா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் பாலகிருஷ்ணா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர்கள் விஜய் – அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை நமிதா
நடிகை நமிதா
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2026 15:35 PM IST

தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் நடிகை நமிதா. இவர் சினிமாவில் கடந்த 2002-ம் நடிப்பு பயணத்தை தொடங்கிய நிலையில் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார். இதில் அதிகப்படியாக நடிகை நமிதா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நமிதா தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை நமிதா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர்கள் அஜித் குமார், விஜய், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் மற்றும் சுந்தர் சி ஆகியோருடன் இணைந்து நடித்து உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நமிதா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர்கள் விஜய் – அஜித் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை நமிதா:

அந்தப் பேட்டியில் நடிகை நமிதா தன்னுடன் நடித்த நடிகர்கள் அஜித் குமார், விஜய் மற்றும் பாலகிருஷ்னா குறித்து பேசியுள்ளார் அதில் அவர் பேசியதாவது, அழகிய தமிழ் மகன் படத்தின் பூஜை நாள் வரை, நான் உண்மையில் விஜயுடன் நடிக்கப் போகிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பிரபு தேவா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் (Jr NTR) ஆகியோரைப் போலவே, விஜய்க்கும் அற்புதமான நடனத் திறமை உள்ளது.

அஜித் குமாருடன் பில்லா படத்தில் நடித்து இருந்தேன். மேலும் அஜித் மிகவும் ஸ்டைலான நபர், கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே சமயம் மிகவும் அமைதியாகவும் கண்ணியமாகவும் பேசக்கூடியவர். பில்லா’ படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது என்று நமிதா செய்து இருந்தது.

நந்தமுரி பாலகிருஷ்ணா குறித்து சொல்லவேண்டும் என்றால் படப்பிடிப்புத் தளத்தில் பாலகிருஷ்ணா எப்போதும் மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருப்பார். காலை 8 மணிக்கு படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருந்தாலும், அவர் 7:30 மணிக்கே வந்துவிடுவார். நான் அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பே அவர் தனது காட்சிகளில் நடிக்கத் தொடங்கியிருப்பார். அவருடன் சீட்டு விளையாடுவது எப்படி என்று தெரியாததால், பயந்துபோய் அங்கிருந்து ஓடியதும் எனக்கு நினைவிருக்கிறது என்று நமிதா பேசியிருந்தார்.

Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் பாடல்களை வெளியிட்டது படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வசூலில் பட்டையை கிளப்பும் விஸ்வநாத் & சன்ஸ் படம் – எத்தனை கோடிகள் தெரியுமா?

Follow Us