Sardar 2: கார்த்தியின் சர்தார் 2 பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? – வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!
Sardar 2 Audio Launch: நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் காம்போவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புது படம்தான் சர்தார் 2. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இதை பிரபல இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 (Sardar 2) படத்தின் தொடர்ச்சியாக இப்படமானது அமைந்துள்ளது. சர்தார் 1 படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது, கிட்டத்தட்ட ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்தே சர்தார் 2 படமானது உருவாகியுள்ளது. இதில் கார்த்தியுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் (SJ Suryha) மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
சர்தார் 1 படமானது தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், சர்தார் 2 படம் மெடிக்கல் மாஃபியாவை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: அதில் நடனமாடும்போது நான் கர்ப்பமாக இருப்பதே தெரியாது – பூர்ணா!
சர்தார் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது:
கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் சமீபத்தில் மயில் வீரா என்ற பக்தி பாடல் இப்படத்திலிருந்து வெளியானது. இந்த பாடலானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வசூலில் பட்டையை கிளப்பும் விஸ்வநாத் & சன்ஸ் படம் – எத்தனை கோடிகள் தெரியுமா?
சர்தார் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியில் சென்னை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறுகிறதாம். மேலும் இந்த நிகழ்ச்சியிலே சர்தார் 2 படத்தின் ட்ரெய்லரும் வெளியாகுவதாக கூறப்படுகிறது.
சர்தார் 2 படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு:
The D day has arrived 🔥#Sardar2 Audio and Trailer Launch at Chennai Trade Centre, Aug 31st, 2026 ⚡️
Gates open at 6.30 PM 💥
Dear @Karthi_Offl sir fans, big treat awaits ❤️🔥@Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69@lakku76… pic.twitter.com/eLJfWOjl86
— Prince Pictures (@Prince_Pictures) August 30, 2026
சர்தார் 2 படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரஜீஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் போன்றவர்கள் நடிக்கிறார்கள். மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கியமான வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10 தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.