மகேஷ் பாபுவிற்கு சுதா கொங்கராவின் கதை பிடித்தும் நடிக்க முடியல – ஜிவி பிரகாஷ் குமார்
GV Prakash Kumar recent interview | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவருடன் பணியாற்ற இருந்த படம் தொடங்காமலே போனது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்துப் படங்களில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். தொடர்ந்து இசையமைப்பாளராக அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஹேப்பி ராஜ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் இம்மார்டல்.
இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து உள்ளார். படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மகேஷ் பாபுவிற்கு சுதா கொங்கராவின் கதை பிடித்தும் நடிக்க முடியல:
அதன்படி ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் அவரது இசையில் வெளியான படங்கள் மற்றும் வெளியாக உள்ள படங்கள் மற்றும் பேசப்பட்டு இறுதியில் தொடங்காமலே போன படங்கள் குறித்து பேசியது இணையத்தில் வருகின்றது. அந்தப் பேட்டியில் ஜிவி பிரகாஷ் பேசியதாவது, நாங்கள் விஜய் சாரிடம் விவரித்த அதே கதையை சுதா கொங்கரா மேடம் தெலுங்கில் மகேஷ் பாபுவிடமும் கூறினார்; அவருக்கும் அந்தக் கதை பிடித்திருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் போனது. அந்தக் கதை இன்னும் அப்படியே இருக்கிறது; நிச்சயமாக அவர்கள் இந்தப் படத்தை உருவாக்குவார்கள்.
Also Read… எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்… 23 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டடித்த பாய்ஸ் படம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#GVPrakash About the Dropped #MaheshBabu Project
The story that we narrated to #Vijay Sir was also narrated to Mahesh Babu by #SudhaKongara Ma’am in Telugu, and he liked the story. However, due to a few reasons, the project didn’t happen. The story is still there, and they will… pic.twitter.com/21YY6OKf6z
— Movie Tamil (@_MovieTamil) August 29, 2026