AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகும் படங்கள் – வேலை நிறுத்தம் வாபஸ்! – என்ன நடந்தது?

Tamil Film Industry Strike : வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் தமிழ் திரைப்படத் துறையினரின் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த பின் தயாரிப்பாளர் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகும் படங்கள் – வேலை நிறுத்தம் வாபஸ்! – என்ன நடந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Aug 2026 15:01 PM IST

சென்னை, ஆகஸ்ட் 28 :  புதிதாக வெளியாகும் படங்கள் 8 நாளுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற திரையங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைந்து செப்டம்பர் 1, 2026 முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது. அதன் படி வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் திரைப்படங்கள் வெளியாகது எனவும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திரைத்துறை வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் வாபஸ்!

அமைச்சர் ராஜ்மோகனுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், பேரவை முடிந்ததும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுப்படங்களின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்பு ரத்து தொடர்பான அறிவிப்புகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!

புதிதாக வெளியாகும் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கமும், திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் திரைப்பட தயாரிப்பாளர்களை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் 4 வாரங்கள் என்ற நடைமுறை இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் 8 வாரங்கள் என உடனடியாக முடிவெடுக்கப்பட்டது தவறு என கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் செப்டம்பர் 1 முதல் வேலை நிறுத்தம் அறிவித்தன.

இதனையடுத்து வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாது எனவும், புது படங்கள் ரிலீஸ் எதுவும் இருக்காது என வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படங்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவானது. இந்த நிலையில் அமைச்சர்ராஜ்மோகனை சந்தித்த பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26, 2026 இன்று செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம்.

இதையும் படிக்க : சட்டமன்ற மரபை உடைத்த முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் வரிசையில் திடீரென அமர்ந்து அதிரடி!!

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, இதனை முதல்வர் ஜோசப் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று, முதல்வரின் வழிகாட்டுதலோடு தயாரிப்பாளர் சங்கம், விநியோகிஸ்தர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியாக தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1, 2026 முதல் அறிவித்த வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us