AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

திமுகவில் அமைப்பு ரீதியாக முக்கியமான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் மூன்று தொகுதிகளைக் கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Aug 2026 13:47 PM IST

ஆகஸ்ட் 28, 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சி அளவில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைகளில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சி எந்தெந்த பகுதிகளில் வலுப்பெற வேண்டும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

திமுகவில் 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு:


இந்தச் சூழலில், திமுகவில் அமைப்பு ரீதியாக முக்கியமான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் மூன்று தொகுதிகளைக் கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!

சென்னையில் மட்டும் மொத்தம் 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை, சேலம், கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 5 மாவட்டங்களாகவும், திருச்சி, கடலூர், ஈரோடு, திருப்பூர் ஆகியவை தலா 4 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக திமுகவில் 77 மாவட்டங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்:

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “2018ஆம் ஆண்டு இதே நாளில், திமுக தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, ‘நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?’ எனப் பேசியிருந்தேன்.

மேலும் படிக்க: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.. சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும் என அப்போது தெரிவித்திருந்தேன்.

கழகத் தலைவராக 9ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்கு கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும். உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us