BKU மற்றும் இருமுடி பட வெற்றி.. PR01 படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய மமிதா பைஜூ மற்றும் ஸ்வாசிகா!
Mamitha Baiju and Swasika: மமிதா பைஜூ தற்போது பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் PR01 படத்தில் லீட் நாயகியாக நடித்துவருகிறார். அண்மையில் இவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் போன்ற படங்கள் வெற்றியான நிலையில், PR01 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
மலையாளம் சினிமாவின் மூலம் நுழைந்து, தற்போது தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்தவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெத்தலகேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). மலையாளத்தில் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான இப்படத்தில், மமிதா மற்றும் நிவின் பாலி (Nivin Pauly) இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மமிதா பைஜூவின் நடிப்பில், இந்த 2026ம் ஆண்டில் மொத்தம் 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த மூன்று படங்களும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.
அதை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) PR01 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்துவரும் ஸ்வாசிகாவின் (Swasika) இருமுடி (Irumudi) படமும் ஹிட்டான நிலையில், அவருக்கு சேர்த்து கேக் வெட்டி படக்குழு கொண்டாடியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.




இதையும் படிங்க: அனிருத் ஒரு தனித்துவமானவர்.. பாராட்டி பேசிய நடிகர் நானி!
நடிகைகள் மமிதா பைஜூ மற்றும் ஸ்வாசிகா படங்கள் வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு தொடர்பான வீடியோ:
#PradeepRanganathan and team celebrate the blockbuster success of @_mamithabaiju’s #VAS and #Irumudi, along with Swasika, in their new set! 🔥❤️
A celebration of success and the journey ahead! ✨ pic.twitter.com/uEJLzmpFWK— Kk (@kotterwerr) August 28, 2026
நடிகை மமிதா பைஜூவின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் ஜன நாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் பெத்லகேம் குடும்ப யூனிட் மொத்தம் 3 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த மூன்று படங்களும் ஒரு மாத மற்றும் 2 வாரங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து வெளியானவை. இந்த மூன்று படங்களும் மமிதா பைஜூவுக்கு வெற்றியாகவே அமைந்துள்ளது. இப்படங்கள் எல்லாமே ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மண்டாட்டி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்… கலகலப்பாக பேசிய சூரி
ஸ்வாசிகாவின் வெற்றி படம்:
நடிகை ஸ்வாசிகவின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் இதுவரை 2 பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிஇருக்கிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் இவர் நடித்திருந்தார். இதன் பிறகு, தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவின் நடிப்பில் வெளியான இருமுடி என்ற படத்திலும் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.