AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இயற்கை உதவியுடன் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தமிழக கிராமம் – உலகுக்கே முன்னோடி!

Climate Resilient Village : கடலூர் மாவட்டம் கிள்ளை என்ற கிராமத்தில் மீன் பிடித்தலும் விவசாயமுமே இந்த கிராம மக்களின் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கிராமம் அடிக்கடி புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இயற்கை உதவியுடன் புதிய மாற்றங்களை செய்துள்ளது.

இயற்கை உதவியுடன் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தமிழக கிராமம் – உலகுக்கே முன்னோடி!
கிள்ளை கிராமம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Aug 2026 16:07 PM IST

கடலூர், ஆகஸ்ட் 30 : கடலூர் மாவட்டம் கிள்ளை என்ற கிராமத்தில் புயல், வெள்ளம் ஆகிய பேரிடர்களை உயற்கையோடு இணைந்து எதிர்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிள்ளை என்ற கிராமம் பிச்சாவரம் சதுப்பு நில காடுகளை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இயற்கை உதவியுடன் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் கிராமம்

மீன் பிடித்தலும் விவசாயமுமே இந்த கிராம மக்களின் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கிராமம் பல ஆண்டுகளாக புயல், கடல் அரிப்பு, வெள்ளம், கடல்நீர் ஊருக்குள் புகுவது போன்ற பிரச்னைகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பேரிடருக்கு பிறகு ஏற்பட்ட சேதாரங்களை சரி செய்வது, அரசிடம் இருந்து நிவாரணம் எதிர்பார்ப்பது போன்ற சிக்கல்களை சந்தித்து வந்தனர். இதனயைடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க : “ஜெயலலிதாவே சவால்களைச் சந்தித்தார்”.. முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி சவால்.. வார்த்தைக்கு வார்த்தை வெடித்த சர்ச்சை!!

அந்த வகையில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய கால நிலை அபாயங்களை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் கிராமத்தை மாற்ற நீண்ட கால திட்டம் உருவாக்கப்பட்டது. காலநிலை மாற்ற திட்டம் என அறிவிக்கப்பட்ட இந்த இந்த திட்டம் டபுள்யூஆர்ஐ இந்தியா என்ற அமைப்பின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பக்கிங்ஹாம் கால்வாய் 3 கி.மீ தூரத்துக்கு தூர்வாரப்பட்டது. அந்த கால்வாயில் பல்வேறு ஆண்டுகளாக படிந்திருந்த வண்டல் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. இதனால் கால்வாயில் நீர் வேகமாக சென்றது. குறிப்பாக கடல் அலைக்கு ஏற்ப இந்த கால்வாயில் நீர் வெளியேறியது. இதன் காரணமாக அந்த பகுதியை சுற்றியுள்ள சதுப்பு நிலங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின.

பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு

கிள்ளை கிராமத்தை ஒட்டியுள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகள், புயல் மற்றும் கடல் சீற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் இயற்கையான தடுப்புச் சுவராக செயல்படுகின்றன. புயல் நேரங்களில் கடலிலிருந்து வரும் பலத்த அலைகள் மற்றும் கடல் சீற்றத்தின் வேகத்தை குறைப்பதுடன், கடலோரப் பகுதிகளை பாதுகாக்கவும் இந்தக் காடுகள் உதவுகின்றன.

இதுமட்டுமின்றி, மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான முக்கிய வாழ்விடமாகவும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. மாங்குரோவ் காடுகள் அதிக அளவில் கார்பனை சேமிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இவற்றை பாதுகாப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கிராமத்தில் சூரிய மின் சக்கிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வீடுகளுக்கு தேவையான மி்சாரத்தை பெற சூரிய மின்சக்கி அமைப்புகள் நிறுவப்பட்டன. மேலும் பிச்சாவரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல பயன்படும் எரிபொருள் மூலம் இயங்கும் படகுகள் மாற்றப்பட்டு சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் படகுகள் மாற்றப்பட்டன. இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு குறைவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைந்துள்ளது.

இதையும் படிக்க : “தவெக ஆட்சி அமைந்தது ஒரு விபத்து.. 5 ஆண்டுகள் நீடிக்காது!”.. இபிஎஸ் சரமாரி விமர்சனம்!!

தேனீ வளர்ப்பிலும் புதிய முயற்சி

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, உள்ளூர் மக்கள் அறிவியல் முறையிலான தேனீ வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இத்தகைய மாற்று வாழ்வாதார முயற்சிகள், இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன் கிராம மக்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் பிற கிராமங்களுக்கு முன்மாதிரி திட்டமாக பார்க்கப்படுகிறது.

Follow Us