AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நிலவில் 1 ஏக்கர் நிலம் – வருங்கால மனைவிக்கு பரிசளித்த நாமக்கல் இளைஞர்

Moon Land Wedding Gift : நாமக்கலை சேர்ந்த இளைஞர் தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக நிலாவில் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார். தற்போது நிலாவில் இடம் வாங்கியதற்கான சான்றிதழ்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலவில் 1 ஏக்கர் நிலம் – வருங்கால மனைவிக்கு பரிசளித்த நாமக்கல் இளைஞர்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Aug 2026 21:48 PM IST

நாமக்கல், ஆகஸ்ட் 29 : நாமக்கலை சேர்ந்த இளைஞர் தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக நிலாவில் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார். தற்போது நிலாவில் இடம் வாங்கியதற்கான சான்றிதழ்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

வருங்கால மனைவிக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளித்த நாமக்கல் இளைஞர்

பொதுவாக திருமணத்தின் போது மணமகன்கள் தங்கள் வருங்கால மனைவிக்கு புது வீடு, நகைகள், கார், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவற்றை பரிசளிப்பதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாமக்கல் இளைஞர் தனது வருங்கால மனைவிக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்கவிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அசோக் சரவணன் என்ற இளைஞர் கட்டிட பொறியாளராக இருந்து வருகிறார். இருவருக்கும் வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்டுகிறது. இதனையடுத்து அவர் தனது மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசை வழங்க திட்டமிட்டிருக்கிறார்.

இதையும் படிக்க : வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையா? டிடிவி தினகரன் பரபரப்பு கேள்வி

அதன் ஒரு பகுதியாக நிலவில் இடம் வாங்கி தனது வருங்கால மனைவிக்கு பரிசளிப்பது என அசோக் முடிவெடுத்திருக்கிறார். இதனையடுத்து லண்டனில் உள்ள தனது சகோதரி மூலம் சர்வதேச நில நிலவு பதிவேடு இணையளதம் மூலம் ஆன்லைனில் தொடர்புகொண்டு நிலவில் 1 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

நிலவில் அவர் வாங்கிய நிலத்திற்கான சான்றிதழ்கள் லண்டனில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இதனை தனது வருங்கால மனைவிக்கு ராதிகாவுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது வருங்கால மனைவிக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளித்த விவகாரம் அந்த பகுதியில் உடனடியாக பரவி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது போல கடந்த 2023 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒரு இளைஞர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பரிசளித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு நிலவை உனக்காக கொண்டு வருவேன் என சொன்னதாகவும் அதனை நிஜமாக்கும் விதமாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கி பரிசளித்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்த நிலையில் திருமணத்துக்கு பிறகு தனது மனைவியின் பிறந்தாளுக்கு நிலவில் 1 ஏக்கர் நிலம் பரிசளித்திருக்கிறார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு காத்திருக்கும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

இந்தியாவின் சந்திராயன் 3 நிலவில் வெற்றிகராக நிலவில் தரையிறங்கியதைத் தொடர்ந்து சஞ்சய் மஹதோவுக்கு இந்த யோசனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் மூலம் இந்த நிலத்தை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை முழுவதுமாக நிறைவடைய சுமார் ஓராண்டு ஆனதாகவும், நிலவில் ஒரு ஏக்கர் நிலத்திற்கான பதிவு ஆவணத்தை பெற்றுள்ளதாகவும் சஞ்சய் கூறியுள்ளார்.

 

Follow Us