AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு காத்திருக்கும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு காத்திருக்கும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Aug 2026 14:37 PM IST

சென்னை, ஆகஸ்ட் 29 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 29, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 31, 2026 திங்கள் கிழமை வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 29, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு காத்திருக்கும் மழை

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30, 2026 நாளை மற்றும் ஆகஸ்ட் 31, 2026 நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழையும் தொடரும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற வடதமிழக மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : டெல்லி ரயிலில் சூட்கேஸில் உடல் பாகங்கள்.. பிரியாணி டபராவில் மனித உடல் இருந்த வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது!

குறிப்பாக ஆகஸ்ட் 29, 2026 இன்று தமிழகத்தில் பரவலான கனமழைக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், சில பகுதிகளில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்றும் சில நேரங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை

 

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 01, 2026 மற்றும் செப்டம்பர் 02,2026 ஆகிய 2 நாட்கள் வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் அநேக மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக சேலம் கருப்பூர் பகுதியில் 4.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏவின் பேச்சு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதிமுக அதிரடி பாய்ச்சல்!

வெப்ப நிலையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக பட்சமாக ஓரிரு இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பிறகு பகுதிகளிலும்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2.4′ செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 40.0 செல்சியஸ் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us