AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொளக்கும் வெயில் ஒரு பக்கம்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

TN Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொளக்கும் வெயில் ஒரு பக்கம்.. எத்தனை மாவட்டங்களில் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 29, 2026: தமிழகத்தில் ஒருபுறம் மிதமான மழை பெய்து வரும் நிலையில், மறுபுறம் பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து வேலூரில் 39.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.9 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

உள் தமிழகத்தில் உயரும் வெப்பநிலை:

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் இலவச சைக்கிள் வழங்கல்.. தமிழக அரசின் அதிரடி மூவ்!

செப்டம்பர் 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கும், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் சில இடங்களில் மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us