AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!

Minister CTR Nirmalkumar: "கோயில்களுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?" என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விவகாரம் மற்றும் கோயில் அறங்காவலர் குழு நியமனம் குறித்துப் பேசிய அவர், உண்மையான ஆன்மிக பக்தர்களுக்கு மட்டுமே அறங்காவலர் குழுவில் இடம் வழங்கப்படும் என்றும், அரசியல்வாதிகளின் பெயர்கள் கோயில் பத்திரிகையில் இடம்பெற வேண்டிய அவசியமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!
அமைச்சர் நிர்மல் குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Aug 2026 14:01 PM IST

சென்னை, ஆகஸ்ட் 29: தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களின் நிர்வாகம், அறங்காவலர் குழு நியமனம் மற்றும் கோயில் திருவிழாக்களுக்கான பத்திரிகை அச்சிடுதல் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் அவ்வப்போது எழுவது வழக்கம். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விவகாரத்தில், விழாக்களுக்கான அழைப்பிதழில் மரபு மற்றும் விதிகள் பின்பற்றப்படுவது தொடர்பானக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இந்நிலையில், கோயில் நிர்வாக நடைமுறைகள் மற்றும் அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்த கருத்துகள் ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் புழல் சிறை ஆய்வு சாதாரணமாக இருந்து விடக்கூடாது… தவாக வேல்முருகன் வலியுறுத்தல்!

கோயில் அழைப்பிதழ் சர்ச்சை:

கோயில் குடமுழுக்கு அல்லது சிறப்பு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், தனிநபர்களின் பெயர்களைப் போடுவது தொடர்பாக எழுந்த புகார்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்களால் கட்டப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த கோயில்களில், இறைவனுக்கும் இறைவிக்கும் மட்டுமே முதன்மை இடம் உண்டு தவிர, எந்தவொரு தனிநபரின் பெயரும் இடம்பெற வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அவர், இது அரசியல் செய்வதற்கான இடம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பத்திரிகை அச்சிடுவதில் ஏதேனும் சிறு பிழைகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அறங்காவலர் குழு நியமனத்தில் புதிய அணுகுமுறை:

கடந்த காலங்களில் ஒவ்வொரு கோயிலிலும் ஆளுங்கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அல்லது அவர்களின் உறவினர்களே அறங்காவலர் குழுவில் நிரப்பப்பட்டு வந்த நிலையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய சூழலில் அதுபோன்ற நடைமுறைகளுக்கு இடம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். “கோயில்களுக்கும் திமுக கட்சி நிர்வாகிகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ கோயில் நிர்வாகக் குழுவைக் கைப்பற்றுவதை ஏற்க முடியாது என்றார்.

மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!

உண்மையான பக்தர்களுக்கே முன்னுரிமை:

கோயில்களின் வளர்ச்சிக்காகவும் பராமரிப்புக்காகவும் உண்மையிலேயே தொண்டாற்றும் ஆன்மீக அன்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு மட்டுமே அறங்காவலர் குழுவில் வாய்ப்பளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். கோயில் நிர்வாகம் மற்றும் அதன் வழிபாட்டு மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும், எந்தவொரு தனிநபரும் தனது அதிகாரத்தையோ பெயரையோ முன்னிலைப்படுத்த அதிகாரம் இல்லை என்றும் கூறித் தனது பேச்சை முடித்தார்.

Follow Us