AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டெல்லி ரயிலில் சூட்கேஸில் உடல் பாகங்கள்.. பிரியாணி டபராவில் மனித உடல் இருந்த வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது!

Train Suitcase Body Case : சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகம் மற்றும் பிரியாணி டபராவில் உடல் இருந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை மணிப்பூரில் போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

டெல்லி ரயிலில் சூட்கேஸில் உடல் பாகங்கள்.. பிரியாணி டபராவில் மனித உடல் இருந்த வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது!
கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Aug 2026 12:54 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரயிலில் ஒரு பெட்டியில் துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கிருந்து ஒரு சூட்கேஸ் கைப்பற்றப்பட்டது. அதில், பெண்ணின் உடல் பாகங்கள் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சூட் கேஸை கொண்டு வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஒரு ஆண் மற்றும் பெண் சூட்கேஸை ரயிலில் விட்டு சென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களின் செல்போன் சிக்னல் மூலமாக ஒடிசா தப்பி செல்ல இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

மணிப்பூரில் முக்கிய குற்றவாளி

அதன்படி, அவர்களை கைது செய்வதற்காக போலீசார் ஒடிசா சென்ற நிலையில், அவர்கள் அங்கிருந்து மணிப்பூர் தப்பி சென்றனர். இருந்தாலும், மணிப்பூரில் வைத்து முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் மாணிக் உத்தின் லஸ்கர் என்பதும், அவரது மனைவி பகமதி மாஜிக் என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமுறைக்கான அவரது மனைவி பகமதி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அதிகாலையிலேயே கொடூரம்.. செங்கல்பட்டில் கார் டயர் வெடித்து விபத்து.. பரிதாபமாக பறிபோன 4 உயிர்!

சூட்கேஸில் உடல் பாகம்- பிரியாணி டபராவில் மனித உடல்

மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் பகமதி மாஜிக் மற்றும் ஹைதுல் நிஷா ஆகியோர் தாம்பரம் பகுதியில் ஒரு வீட்டில் ஒன்றாக தங்கி இருந்ததாகவும், இதில், அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஹைதுல் நிஷாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை சூட்கேசில் வைத்து டெல்லி செல்லும் ரயிலில் விட்டு சென்றதும், மீதமுள்ள உடல் பாகங்களை டபராவில் வைத்து வேக வைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஹைதுல் நிஷாவின் தலையை துண்டித்து வேறு எங்கேயோ வீசி இருப்பதும் தெரியவந்தது.

அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்பு

இது தொடர்பாக, ஹைதுல் நிஷாவின் மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை நிஷாவின் தலை எங்கு கிடைக்கிறது என்று போலீசார் கண்டறியவில்லை. தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மாணிக் உத்தின் லஸ்கர் கைது செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவரிடம் போலீசார் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: NEET-இல் பாஸ் செய்தும் கிடைக்காத MBBS சீட்.. நெல்லையில் சோகம்.. மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Follow Us