வாகன ஓட்டிகள் கவனிக்க.. வேளாங்கண்ணி தேவாலய பெருவிழா.. பெசன்ட் நகரில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்..!
Besant Nagar Traffic Diversions : சென்னை வேளாங்கண்ணி தேவாலய பெருவிழாவையொட்டி, பெசன்ட் நகரில் இரு நாள்கள் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
சென்னை மாவட்டம், பெசன்ட் நகரில் வேளாங்கண்ணி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 29- ஆம் தேதி) திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை சுமார் 4:30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, நற்கருணை தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. இதே போல, வருகிற ஆகஸ்ட் 31- ஆம் தேதி ( திங்கட்கிழமை) இரவு சுமார் 7:30 மணி அளவில் நற்கருணை ஊர்வலம் நடைபெற உள்ளது. மேலும், செப்டம்பர் 7- ஆம் தேதி ( திங்கள்கிழமை) இரவு சுமார் 7:30 மணி அளவில் பெரிய தேர் பவனியும், செப்டம்பர் 8- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) மாலை கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பெசன்ட் நகரில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம்
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளான ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 7,8- ஆம் தேதிகளில் பெசன்ட் நகர் பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தருவார்கள். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்ப்பதற்காக, மேற்கண்ட 2 நாட்கள் பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை போலீசார் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: 27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!




பொது மக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம்
இதில், வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவுக்கு வருகை தரும் பொது மக்கள் தங்களது வாகனங்களை
- ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி.
- அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி.
- பெசன்ட் நகர் 2- ஆவது பிரதான சாலை.
- பெசன்ட் நகர் 4- ஆவது அவென்யூ .
- பெசன்ட் நகர் 17- ஆவது குறுக்கு தெரு
காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
ஆகிய இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெசன்ட் நகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அவ்வாறு நடைபெறும் விழாவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனித வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
இதனால், வேளாங்கண்ணி தேவாலய சாலை பகுதியில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக, தேவாலய விழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்து இடையூறு இன்றி நிறுத்தி வழிபாட்டில் பங்கேற்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் கொடூரம்.. ஆந்திர பெண் கழுத்து நெறித்து கொலை.. முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் அழிக்க முயற்சி!