AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள்.. காத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வருகை!

Nepal Flood 21 Tamls Arrived Chennai : நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பிழைத்த தமிழகத்தை சேர்ந்த 21 யாத்ரிகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர்கள் நேரில் வரவேற்றனர் .

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள்.. காத்மண்டுவில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வருகை!
சென்னை வந்தடைந்த தமிழர்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Aug 2026 06:29 AM IST

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம்- சீனா எல்லையில் பாயும் போதே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் ஏராளமான பொதுமக்கள் சிக்கினர். இதில், 469 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நாட்டுக்கு, சென்னை, திருச்சி, திருவாரூர், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 57 பேர் கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் கைலாஷ் யாத்திரா நிறுவனத்தின் மூலமாக கயிலாய யாத்திரைக்கு சென்று இருந்தனர். அங்கு, நிகழ்ந்த கடும் வெள்ளப்பெருக்கில் இவர்கள் சிக்கிய நிலையில், 21 பேர் மட்டும் பாதுகாப்பாக தப்பினர். இவர்கள் நேபாலத்தில் உள்ள ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்தன.

டெல்லி மூலம் சென்னை வந்தடைந்த 21 தமிழர்கள்

அதன் அடிப்படையில், அவர்கள் நேற்று காத்தமண்டுவில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 3:45 மணிக்கு புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அங்கு, அவர்களை தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், இரவு 8 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட அவர்கள் நேற்று இரவு சுமார் 11: 15 மணி அளவில் சென்னையை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் படிக்க: அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!

இனிப்பு வழங்கி வரவேற்ற உறவினர்கள்

தொடர்ந்து, 21 பேரும் அவர்களது சொந்த ஊர்களான மயிலாடுதுறை, ஓசூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு, அவர்களை உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். முன்னதாக நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வரவும், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் நிலையை அறிந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தார். இதற்காக, அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகிய 4 அமைச்சர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளியுறவுத்துறை செயலரிடம் அமைச்சர்கள் ஆலோசனை

இவர்கள் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை நேரில் சந்தித்து, தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர் இதில் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக மீட்பு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அங்க சிக்கி இருந்த தமிழர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். எஞ்சிய தமிழர்களை தேடும் பணிகள் இங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் புழல் சிறை ஆய்வு சாதாரணமாக இருந்து விடக்கூடாது… தவாக வேல்முருகன் வலியுறுத்தல்!

Follow Us