சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் – மின்னணு முறையில் ஏலம்
E-Auction for Abandoned Vehicles : தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். இந்த நிலையில் முதற்கட்டமாக சென்னையில் ஆகஸ்ட் 28, 2026 இன்று 1, 936 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை, ஆகஸ்ட் 28 : சென்னையில் யாரும் உரிமை கோராத வாகனங்களை மின்னணு முறையில் காவல்துறையினர் ஏலத்தில் விட்டனர். முதற்கட்டமாக சென்னையில் ஆகஸ்ட் 28, 2026 இன்று 1, 936 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலையில் இரு சக்கர வாகனம் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த வாகனத்தை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டினர். சாலையோரங்களில் யாரும் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபடுபவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
சென்னையில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் ஏலம்
இந்த நிலையில் அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் யாரும் உரிமை கோரவில்லை என்றால் காலப்போக்கில் துருபிடித்தும் அல்லது பழுதடைந்தும் போகின்றன. ஒரு கட்டத்தில் யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு போகிறது. இதனை தடுக்க அந்த வாகனங்களை ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் வாகனம் கிடைக்கும் என்பதால் பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதையும் படிக்க : பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் இலவச சைக்கிள் வழங்கல்.. தமிழக அரசின் அதிரடி மூவ்!




காவல்துறையினரால் கைப்பற்றப்படும் வாகனங்கள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏலத்தில் விடப்படுகின்றன. காவல்துறையினரால் சாலையோரம் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மொத்தம் 5,543 இருந்தன. அதில் முதல் கட்டமாக 1, 936 வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஆகஸ்ட் 28, 2026 இன்று மின்னணு முறையில் ஏலத்தில் விடப்பட்டன.
மீதம் உள்ள 3,607 வாகனங்களும் விரைவில் மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்த கட்டமாக மின்னணு முறையில் ஏலத்தில் விடப்படும் என காவல்துறையினர் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த செலவில் வாகனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், போதைப்பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 81 பைக்குகள், 12 ஆட்டோக்கள் உள்ளிட்ட 102 வாகனங்களும், நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெற்று மின்னணு வாயிலாக விரைவில் ஏலத்தில் விடப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : மதுரையில் பரபரப்பு – லட்சக்கணக்கில் ஆன்லைன் மோசடி… பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியல்
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். அதே போல போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக ரேசன் பொருட்கள் கனிம வளங்கள், திருட்டு போன்ற சம்பவங்ககளில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளின் போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பாக மாற்றங்கள் செய்திருந்தால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம். இது போன்ற சூழ்நிலைகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.