AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட இத எதிர்பார்களையே.. தனுஷ் – சிறுத்தை சிவா காம்போவில் புது படம்?

Dhanushs new film: தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகராக இருந்துவருபவர்தான் தனுஷ். இவரின் நடிப்பிலும் தொடர்ந்து புது புது படங்கள் உருவாகிவருகிறது. இந்த வரிசையில் அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புது படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது, அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

அட இத எதிர்பார்களையே.. தனுஷ் – சிறுத்தை சிவா காம்போவில் புது படம்?
சிறுத்தை சிவா மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Aug 2026 21:28 PM IST

நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் ஆண்டுக்கு 1 படமாவது வெளியாகிவருகிறது. அந்த வரிசையில் தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh raja) இயக்கத்தில் வெளியான இந்த படம் தனுஷுக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்தது. இதையடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasamy) இயக்கத்தில் ஓம் (OM) படத்தில் இணைந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இதற்கு இந்த லப்பர் பந்து பட இயக்குநருடன் புது படத்தில் தனுஷ் இணைகிறார். இந்நிலையில், தனுஷின் 57வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா (Siruthai Siva) இயக்குவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணி பட ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!

தனுஷுடன் இணையும் சிறுத்தை சிவா:

இயக்குநர் சிறுத்தை சிவா இறுதியாக கங்குவா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் இப்படம் வெளியான நிலையில், நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியில் முடிந்தது என கூறலாம். இதையடுத்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுத்தை சிவா எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.

இதையும் படிங்க: BKU மற்றும் இருமுடி பட வெற்றி.. PR01 படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய மமிதா பைஜூ மற்றும் ஸ்வாசிகா!

இந்நிலையில், தற்போது தனுஷை வைத்து புது படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் அஜித் குமாருடன் புது படத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், தனுஷின் படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

தனுஷ் மற்றும் சிறுத்தை சிவா படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு பின் லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் புது படத்தில் இணைகிறார். இதையடுத்தே சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us