AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓம் பட கதாப்பாத்திரங்கள் குறித்து விரிவாக பேசிய இயக்குநர்!

Director Rajkumar Periyasamy | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படம் குறித்தும் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்தும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓம் பட கதாப்பாத்திரங்கள் குறித்து விரிவாக பேசிய இயக்குநர்!
ராஜ்குமார் பெரியசாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2026 16:40 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் அவர் நடிகர் தனுஷின் படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் குறித்தும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓம் பட கதாப்பாத்திரங்கள் குறித்து விரிவாக பேசிய இயக்குநர்:

ஓம் திரைப்படத்தில் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டி அவர்களே முதல் தேர்வாக இருந்தார். இப்படம் தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், சில கூடுதல் காட்சிகள் அல்லது மறுபடப்பிடிப்புக்குரிய பகுதிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளால் ஏற்படும் தவிர்க்க முடியாத காரணங்களாலோ அல்லது நட்சத்திரங்களின் கால்ஷீட் (நேரம் ஒதுக்குதல்) மற்றும் படப்பிடிப்பு இடங்களுக்கான அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களாலோ படப்பிடிப்பு அட்டவணைகள் மாறுபடலாம். பெரும்பாலும், பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரே மாதிரியான முக்கிய வெளியீட்டுத் தேதிகளைக் குறிவைப்பதே இதற்குக் காரணமாக அமைகிறது.

இருப்பினும், நம்மிடம் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது; எனவே, தயாரிப்பாளர்களால் தங்களுக்கு விருப்பமான தேதியைப் பெற முடியாவிட்டால், அவர்கள் அடுத்த சிறந்த வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

Also Read… நானியின் தி பாரடைஸ் பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Toxic: கேஜிஎஃப் 2 பட முதல் நாள் வசூலை முந்தியதா யாஷின் டாக்ஸிக்? விவரங்கள் இதோ!

Follow Us