AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Director Ashwath Marimuthu | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அவர் தர்மன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார் என்றும் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து மற்றும் ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2026 11:04 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக இயக்குநராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். ஃபேண்டசி ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இரண்டவதாக நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து ட்ராகன் என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 2025-ம் ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற தமிழ் படம் என்ற சாதனையும் அந்தப் படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிலம்பரசனின் படத்தை இயக்க திட்டமிட்டு வந்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அந்தப் படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்துள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தர்மன் படம் குறித்து ரஜினிகாந்த் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து:

அதன்படி அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது, தர்மன் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் நிறைவடையும். இதுவரை இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ரஜினி சார் இதில் Gen Z (இன்றைய இளைய தலைமுறை) பாணியிலான துடிப்பான தோற்றத்தில் இருக்கிறார். இப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமையும். படப்பிடிப்புத் தளம் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் உள்ளது.

இதற்கு முன் நான் பணியாற்றிய கதாநாயகர்களான அசோக் மற்றும் பிரதீப் ஆகியோர் இளம் வயதினர் மற்றும் என் நண்பர்கள். ஆனாலும், ரஜினி சார் அளவுக்கு ஒரு இனிமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை. நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர். நான் அவர் அருகில் செல்லும்போதெல்லாம் அவர் எழுந்து நின்று மரியாதை அளிக்கிறார். அதற்கான காரணத்தை நான் கேட்டபோது, ​​இது கலைக்கும் இயக்குநருக்கும் நான் அளிக்கும் மரியாதை, என்று அவர் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… இறுதியாக வெய்டிங் இஸ் ஓவர்… தொடங்கியது ஒன்ஸ்மோர் படத்தின் டிக்கெட் புக்கிங்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 4 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன் – டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன்தாஸ் சொன்ன விசயம்

Follow Us