AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன் – டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன்தாஸ் சொன்ன விசயம்

Director Geetu Mohandas about cinema career | தென்னிந்திய மொழிகளில் நடிகையாகவும் பான் இந்திய மொழிகளில் இயக்குநராகவும் பிரபலமான கீது மோகன் தாஸ் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

4 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன் – டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன்தாஸ் சொன்ன விசயம்
கீது மோகன் தாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 12:33 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ஒன்னு முதல் பூஜ்யம் வரே என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை கீது மோகன் தாஸ். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் அடுத்தடுத்து பலப் படங்களில் கீது மோகன் தாஸ் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியான என் பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கீது மோகன் தாஸ் கடந்த 2000 ஆண்டு லஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற மலையாள படத்தின் மூலமாக நாயகியாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகியாக நடித்து வந்த நடிகை கீது மோகன் தாஸ் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான நள தயமயந்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியானார்.

தொடர்ந்து 2009-ம் ஆண்டுவரை நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய கீது மோகன் தாஸ் தற்போது சினிமாவில் இயக்குநராக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கிய கீது மோகன் தாஸ் தற்போது கன்னட சினிமாவில் நடிகர் யாஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள டாக்ஸிக் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

4 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன்:

இந்த நிலையில் கீது மோகன் தாஸ் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, எனது நான்காவது வயதிலேயே எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினேன். இன்று இந்த நிலையில் இருக்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, ​​என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. இரண்டாவது படத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டது. ஆனால் இப்போது, ​​இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான யாஷ் என் மீது நம்பிக்கை வைத்து, இதைச் செய் என்று ஊக்கப்படுத்தினார். படையப்பா உள்ளிட்ட பல பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களை எனக்கு உதாரணமாகக் காட்டினார். டாக்ஸிக் திரைப்படம் யாஷ் 2.0ஆக அமையப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

Also Read… அஜித் குமாரின் டேர் டெவில் படத்திலிருந்து விலகிய ஸ்ரீலீலா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Rukmini Vasanth: டாக்ஸிக் எனக்கு மிகவும் சிறப்பான ஒரு திரைப்படம் – ருக்மிணி வசந்த்!

Follow Us