BKU உலகளாவிய பிளாக்பஸ்டர்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த நிவின் பாலி!
Nivin Pauly Request: மலையாளம் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில், 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் பெத்லகேம் குடும்பா யூனிட். இப்படத்தினை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கும் நிவின் பாலி வேண்டுகோள் வைத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இதை இயக்குநர் ராம் இயக்க, சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படம் தயாராகி 2 ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன் நிவின் பாலியின் நடிப்பில் வெளியான திரைப்படம் பெத்லகேம் குடும்பா யூனிட் (Bethlehem Kudumba Unit). இதை பிராமலு பட இயக்குநர் கிரிஷ் ஏடி (Girish AD)இயக்க, மமிதா பைஜூ (Mamitha Baiju) லீட் நாயகியாக நடித்துள்ளார்.
2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் இந்த திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தனது ரசிகர்களுக்கு நிவின் பாலி வேண்டுகோள் வைத்துள்ளார்.




இதையும் படிங்க: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே வாரத்தில் வெளியாகும் நயன்தாராவின் இரு படங்கள் என்னென்ன தெரியுமா?
தனது ரசிகர்களிடையே நடிகர் நிவின் பாலி வைத்த வேண்டுகோள்:
அந்த பதிவில் நடிகர் நிவின் பாலி, “உலகளாவிய பிளாக்பஸ்டர் படத்திற்கு நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி. முன்னெப்போதும் இல்லாத முன்பதிவுகளாலும், நீங்கள் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் அளவற்ற மகிழ்ச்சியாலும் நாங்கள் நெகிழ்ந்து போயுள்ளோம். ஒரு தாழ்மையான வேண்டுகோள்: திரையரங்கின் சிறு துணுக்குகளையும் முக்கியக் காட்சிகளையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்வதையோ அல்லது பகிர்வதையோ தயவுசெய்து தவிர்க்கவும்.
இதையும் படிங்க: வசூலில் 80 கோடியைக் கடந்தது இறுமுடி படம்… வைரலாகும் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
திரைப்படத்தின் மாயாஜாலத்தையும் ஆச்சரியங்களையும் அனைவரும் பெரிய திரையில் அனுபவிக்கட்டும். அனைவரும் இந்த அனுபவத்தை சிறப்பானதாக மாற்றுவோம், திரையில் பாப்போம்” என ஆதில் அவர் கூறியுள்ளார்.
பெத்லகேம் குடும்பா யூனிட் திரைப்படம் குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்து பதிவை வெளியிட்ட நிவின் பாலி:
REQUEST YOUR ATTENTION ‼️#BethlehemKudumbaUnit #BKU pic.twitter.com/bGQ110q4bM
— Nivin Pauly (@NivinOfficial) August 24, 2026
மமிதா பைஜூ மற்றும் நிவின் பாலி இருவரின் காம்போவில் வெளியான பெத்லகேம் குடும்பா யூனிட், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது இதுவரை உலகமெங்கும் சுமார் ரூ 63 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரத்தின் இறுதியில் மேலும் வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.