Nivin Pauly: நிவின் பாலிக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. பூஜையுடன் தொடங்கியது NP51 பட ஷூட்டிங்!
NP51 Movie Shooting Pooja: மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் இறுதியாக சர்வம் மாயா படம் வெளியானது. மேலும் புது புது படங்களில் தற்போது இவர் இணைந்தவரும் நிலையில், அறிமுக இயக்குநர் நஷீத் ஃபமி இயக்கத்தில் NP51 படத்தில் இணைந்துள்ளார்.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற மலையாள நடிகர்தான் நிவின் பாலி (Nivin Pauly). இவர் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவருக்கு தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்வம் மாயா (Sarvam Maya). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. பீல் குட் மற்றும் ஒரு ஆன்மாவின் ஆசைகள் பற்றிய கதைக்களத்தில் வெளியான இப்படம், எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் நிவின் பாலி, “பெத்தலஹேம் குடும்பா யூனிட்” (Bethlehem Kudumba Unit) என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார். மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கும் இப்படம், 2026ம் ஆனது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இதற்கு பின் பிரேமம் பட இயக்குநரின் இயக்கத்தில், தனது 50வது படமான விஜயம் என்ற படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்திற்கு பின், அறிமுக இயக்குநர் நஷீத் ஃபமி (Nashid Famy) இயக்கத்தில் NP51 என்ற படத்தில் நிவின் பாலி இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (09/08/2026) தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: நீங்க ஒரு லேடி சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவை பாராட்டிய யாஷ்!
அறிமுக இயக்குநர் நஷீத் ஃபமி இயக்கத்தில் புது படத்தில் நடிப்பது குறித்து நிவின் பாலி பகிர்ந்த எக்ஸ் பதிவு:
Happy to team up with #MartinPrakkat for my next, helmed by #NashidFamy.
More updates soon. pic.twitter.com/yb3EQk8Q7E
— Nivin Pauly (@NivinOfficial) August 9, 2026
மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகும் ருக்மிணி வசந்த்:
தென்னந்திய மொழிகளில் தற்போது சிறப்பான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ருக்மிணி வசந்த். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து அசத்திவருகிறார். அந்த வகையில், மலையாளத்தில் இவர் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம்தான் NP51. அறிமுக இயக்குநர் நஷீத் ஃபமி இயக்கத்தில், இதில் ஹீரோவாக நிவின் பாலி நடிக்கவுள்ளார். மேலும் இதில் சர்வம் மாயாவில் நடித்த அஜூ வர்கீஸும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: ஸ்கூல் படிக்கும் போது… சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ
அந்த வகையில், நிவின் பாலிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (09/08/2026) தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நிவின் பாலி பகிர்ந்துள்ளார்.
நிவின் பாலியின் புது படங்கள் :
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பில் பெத்தலஹேம் குடும்பா யூனிட் என்ற படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகிறது. இதற்கு பின் பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் விஜயம் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நடிகையாக யார் நடிக்கிறார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பிறகே ருக்மிணி வசந்துடன் தனது 51வது படத்தில் நிவின் பாலி இணைந்துள்ளார்.