வெற்றிநடைபோடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
Bethlehem Kudumba Unit movie | மலையாள சினிமாவில் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெத்தலேக குடும்ப யூனிட் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைப் படக்குழு தற்போது கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியான படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படம் 2026-ம் ஆண்டின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள சினிமாவில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது பெத்தலேக குடும்ப யூனிட் படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, ரோஷன் ஷானவாஸ், ஷியாம் மோகன், வினய் கோட்டை, ஸ்ரீந்தா, மீனாட்சி ரவீந்திரன், ஸ்ரீரெஞ்சினி, பிரியா எஸ் பாபு, பிந்து பணிக்கர்,
ஷமீர் கான், பார்வதி அய்யப்பதாஸ், வினீத் விஸ்வம், அபிராம், ஜாசர் கிளிக்குகள், ஜெயசங்கர் கரிமுட்டம், வெட்டுகிளி பிரகாஷ், தங்கம் மோகன் மற்றும் மஞ்சுஸ்ரீ என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




வெற்றிநடைபோடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம்:
இந்தப் படம் கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் வசூலில் நல்ல சாதனை படைத்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தினை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… நாடோடிகள் படத்தின் கதையை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை – சமுத்திரக்கனி
பெத்தலேக குடும்ப யூனிட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
BKU is trending at the box office 📈
386.08K tickets booked in the last 24 hours.
Lock your seats right now: https://t.co/bsXVtZNas9 @_mamithabaiju @BhavanaStudios#Nivinpauly #GirishAD #Mamithabaiju#BethlehemKudumbaUnit #BKU #Onam2026 #TrendingNow pic.twitter.com/RP1bQI9Y5P
— Nivin Pauly (@NivinOfficial) August 23, 2026
Also Read… அந்த படத்திற்கு பிறகு என்னை பல மொழிகளில் நடிக்க அழைத்தார்கள் – சாண்டி ஓபன் டாக்