நிவின் பாலியின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி உள்ள பிரதிச்சாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Nivin Paulys Prathichaya Movie OTT Review Here: மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் சமீபத்ஹில் திரையரங்குகளில் வெளியான படம் பிரதிச்சாயா. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் பிரதிச்சாயா. பொலிட்டிகள் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் ஷரஃப் யு தீன் கார்பரேட் வில்லனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலச்சந்திர மேனன், ஆன் அகஸ்டின், ஹரிஸ்ரீ அசோகன், நிஷாந்த் சாகர், சாய்குமார், மற்றும் விஷ்ணு அகஸ்தியா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
பிரதிச்சாயா படத்தின் கதை என்ன?
இந்தப் படத்தில் கேரள முதலமைச்சரின் இரண்டாவது மகனாக நடிகர் நிவின் பாலி நடித்து இருந்தார். அப்பாவின் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருவார். ஆனால் முதலமைச்சராக அப்பாவிற்கு எம்பியாக இருக்கும் முதல் மகனைவிட இரண்டாவது மகனாக நிவின் பாலிதான் தனது அரசியல் வாரிசு என்று நம்புவார்.




Also Read…. அஜித் – ஷாலினி திருமண நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள்… வைரலாகும் புகைப்படம்
இப்படி இருக்கும் நிலையில் ஒரு பாலியல் குற்ற வழக்கில் சூழ்ச்சி செய்யப்பட்டு சிக்கப்படுகிறார் முதலமைச்சரான நிவின் பாலியின் தந்தை. அந்த குற்றச்சாட்டிற்கு பிறகு நிவின் பாலியின் தந்தை மன உழைச்சலில் உயிரிழந்துவிடுகிறார். இப்படி இருக்கும் நிலையில் தனது தந்தை நிரபராதி என்பதை அனைவருக்கும் நிரூபிக்க போராடுகிறார் நிவின் பாலி.
அந்தப் போராட்டத்தில் முதல்வராகவும் அவர் பதிவி ஏற்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் செய்த முயற்சியில் இந்த சூழ்ச்சிகளுக்கு எல்லாம் பின்னணியில் இருப்பது ஷரஃப் யு தீன் என்பதை தெரிந்துகொள்கிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது அப்பா கலங்கம் அற்றவர் என்பதை நிவின் பாலி எப்படி நிரூபித்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read…. மே மாதத்தில் வெளியீட்டை திட்டமிடும் ஜன நாயகன் படக்குழு – வைரலாகும் தகவல்