AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் லீக்: எடிட்டர் மீது நடவடிக்கை!

Jana Nayagan Movie Editor Suspend: விஜய்யின் ஜன நாயகன் படமானது சில வாரங்களுக்கு முன், இணையத்தில் முழுவதுமாக லீக்காகியிருந்தது. இப்படத்தின் எடிட்டர் மீது பிரதீப் இ ராகவ் மீது புகார் எழுந்துவந்து. இப்படத்தின் லீக்கிற்கு அவருக்கு எந்த சம்மந்தம் இல்லாவிட்டாலும், அவரின் கவனக்குறைவின் காரணமாக படம் முழுவதும் லீக்காகியிருந்தது. அந்த வகையில் படத்தொகுப்பாளர் குழு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் லீக்: எடிட்டர் மீது நடவடிக்கை!
ஜன நாயகன் படத்தின் எடிட்டர் சஸ்பெண்ட்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Apr 2026 19:24 PM IST

கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இதில் தளபதி விஜய் (Thalapathy Vijay) லீட் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம்தான் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நாயகியாக நடித்திருந்தார். மேலும் இதில் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju), விஜய்யின் மகளாக நடித்துள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 500 கோடி பட்ஜெட்டில் இயக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் இப்படமானது முழுமையாக இணையத்தில் கசிந்து, படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இப்படமானது படத்தொகுப்பாளர் பக்கத்தில் இருந்து கசிந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அந்த வகையில் ஜன நாயகன் பட எடிட்டர் பிரதீப் இ ராகவ் (Editor Pradeep E Raghav) பக்கத்தில் இருந்து கசிந்ததாக பேசப்பட்டது. அந்த வகையில் தென்னிந்திய படத்தொகுப்பாளர் யூனியன் (South Indian Film Editors Union), ஜன நாயகன் பட எடிட்டர் பிரதீப் இ ராகவ் இடை நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பேசப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் – 28 ஆண்டுகளைக் கடந்தது ஜீன்ஸ் படம்!

ஜன நாயகன் பட எடிட்டர் பிரதீப் இ ராகவ் இடை நீக்கம் குறித்து வைரலாகும் பதிவு:

விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவிருந்தது. சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது. அந்த வகையில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேல் ஆனா நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்திருந்தது. அந்த பதிப்பில், எடிட்டர் பக்கத்திலிருந்து லீக்கானது என தெரியவந்தது. இப்படத்தின் காட்சிகள் பிரபல ஸ்டூடியோ ஒன்றில் எடிட் செய்யப்பட்டுவந்த நிலையில், அங்கு எடிட்டராக பணியாற்றிய நபர் ஒருவர்தான் இதை லீக் செய்திருந்தார் என தெரியவந்தது.

இதையும் படிங்க: வாக்களிக்கும் போது கமல் ஹாசன் – ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை… கிளம்பியது சர்ச்சை!

அந்த வகையில் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் மொத்தம் 9 பேரை கைது செய்திருந்தனர். அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் எடிட்டர் பிரதீப் இ ராகவ் மீது விசாரணை நடைபெற்றுவந்தது. அந்த வகையில், தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கத்தினர் எடிட்டர் பிரதீப் இ ராகவை இடை நீக்கம் செய்துள்ளனர். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாகியுள்ளது.

Follow Us