Jana Nayagan: ஜன நாயகன் படத்தை கசியவிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்!
Editors Union Clarification: தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படமானது சமீபத்தில் இணையத்தில் கசிந்த நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தை எடிட்டர் வெளியிட்டதாக பரவிவரும் தகவலுக்கு, படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
இயக்குநர் எச்.வினோத்தின் (H. Vinoth) இயக்கத்தில், தளபதி விஜய்யின் (Thalapathy VIjay) 69வது திரைப்படமாக தயாராகிவந்ததுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அதிரடி ஆக்ஷன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்து, விஜய் தனது வளர்ப்பு மக்களுக்காக படும் பல்வேறு கஷ்டங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புகள் குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியிருந்தது. இந்த படமானது விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் 5 நிமிட காட்சி லீக்காகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து படம் முழுவதும் வெளியான நிலையில், ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அந்த விதத்தில் இப்படத்தை லீக் செய்ததாக கிட்டத்தட்ட 6 நபர்களை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்துள்ளனர். மேலும் இப்படத்தின் லீக்கிற்கு படத்தின் எடிட்டர் பிரதீப் இ.ராகவ் (Editor Pradeep E Ragav) காரணம் என பேசப்பட்டுவந்த நிலையில், தற்போது அது குறித்து படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம் (Editors Union) கொடுத்துள்ளது.




இதையும் படிங்க: டிராகன் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சாய் அபயங்கர்.. ஹீரோவா? இசையமைப்பாளரா?
ஜன நாயகன் பட லீக் குறித்து படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம் :
தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட கசிவில் எடிட்டர் பிரதீப் இ.ராகவ்விற்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும் இயக்குநர் எச்.வினோத், இதில் சில காட்ச்சிகளை மேம்பாட்டு செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி, கடந்த 2026 ஜனவரி 14ம் தேதியில், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரின் முறையான ஒப்புதலுடன், சிஜி மேம்பாடு மற்றும் ஒலி மிக்சிங்காக எடிட்டர் ஒரு காப்பியை அன்னபூர்ணா ஸ்டுடியோவிற்கு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: ஏழு கடல் ஏழு மலை படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்
அங்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டிருந்தனர். எனவே அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எடிட்டர் இப்படத்தை லீக் செய்ய நினைத்திருந்தால், வாட்டர்மார்க் இல்லாமல் அசல் 4கே தரைத்திலே வெளியிட்டிருக்கமுடியும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் பட லீக் குறித்து படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம் குறித்து வைரலாகும் பதிவு:
Editor’s Union Clarification on #JanaNayagan Leak 🚨
– The Editors’ Union has clarified that Editor #PradeepERagav has no involvement in the leak of JanaNayagan.
– As per the statement, Director #HVinoth had planned further enhancements for the film. Accordingly, on January 14,… pic.twitter.com/yb8RpcAUkw— Movie Tamil (@_MovieTamil) April 13, 2026
ஜன நாயகன் படமானது லீக்கானதை ஒட்டி, சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் உள்ளனர். அதிலும் 6 நபர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத வகையில் அவர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.