ஜன நாயகன் படத்தின் லீக் – தணிக்கை வாரியம் விளக்கம்
Central Board of Film Certification Clarification For Jana Nayagan Leak Issue: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தணிக்கை வாரியம் தங்களது விளக்கத்தை அளித்து உள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக இந்த சென்சார் தொடர்பான பிரச்சனைகளே சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மறு தணிக்கை வாரியம் ஜன நாயகன் படத்தைப் பார்த்து முடித்துவிட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் போடியிடும் காரணத்தால் தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் படம் இணையத்தில் கசிந்தது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்விற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தணிக்கை வாரியம் தற்போது தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.




ஜன நாயகன் விவகாரட்த்தில் தணிக்கை வாரியத்தின் விளக்கம்:
ஜன நாயகன் என்ற தமிழ்த் திரைப்படம், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து கசிந்துவிட்டதாகக் கூறும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை ஆகும். சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரையரங்கத் திரைப்படங்களுக்கும், பாதுகாப்பான ‘KDM’ (Key Delivery Message) அமைப்பைத் தான் பின்பற்றுவதாக CBFC தெளிவுபடுத்தியுள்ளது. இத்திரைப்பட உள்ளடக்கத்தை அணுகுவது கடவுச்சொல் (Password) மூலம் பாதுகாக்கப்படுகிறது; மேலும், இந்த KDM குறியீடு தயாரிப்பாளர் அல்லது திரைப்படத் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும்.
செல்லுபடியாகும் ஒரு KDM குறியீடு இல்லாமல், அத்திரைப்படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ இயலாது. “ஜன நாயகன்” திரைப்படத்தின் DCP (Digital Cinema Package) நகலானது, மார்ச் 17 அன்று மும்பையில், உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது; அன்றிலிருந்து அது அவர்களிடமே இருந்து வருகிறது என்று விளக்கம் அளித்து உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜன நாயகனுகாக குரல் கொடுக்கும் கமல் ஹாசன் முதல் பான் இந்திய பிரபலங்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
📢 Clarification from CBFC Regarding #JanaNayagan Leak !!
Reports claiming that the Tamil film “Jana Nayagan” was leaked from the Central Board of Film Certification (CBFC) are baseless and misleading.
CBFC has clarified that it follows a secure KDM (Key Delivery Message)… pic.twitter.com/1pl4pldYoB
— OTT Trackers (@OTT_Trackers) April 11, 2026
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கென் கருணாஸின் யூத் படம்