ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கென் கருணாஸின் யூத் படம்
Ken Karunas Youth Movie Update: தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர்கள் பலர் நடித்து திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான படம் யூத். கென் கருணாஸ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் வெளியாகி வருகின்றது. இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் யூத். இந்தப் படத்தை இயக்குநர் கென் கருணாஸ் எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்த யூத் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகம் ஆவது மட்டும் இன்றி நாயகனாகவும் இந்தப் படத்தில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முழுக்க முழுக்க பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் இளைஞர்களை மையமாக வைத்து உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியனா போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படம் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்த இந்த யூத் படத்தினை தற்போது ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.




ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கென் கருணாஸின் யூத் படம்:
ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 15 வயது சிறுவன் தனது டீன் ஏஸ் மாற்றங்களையும், தன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் வருகின்ற 16-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… பல தடங்களுக்குப் பிறகு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Ada ennada ithu kaadhaluku vandha sodhanai? 🤭💔 pic.twitter.com/gJHkSEqa9N
— Netflix India South (@Netflix_INSouth) April 11, 2026
Also Read… ஜனநாயகன் பட வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடிவடிக்கை பாயும் – படக்குழு எச்சரிக்கை