ஜனநாயகன் பட வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடிவடிக்கை பாயும் – படக்குழு எச்சரிக்கை
Jana Nayagan Movie Team Released Legal Notice : தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகாமல் உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் இருந்து வீடியோ லீக் ஆகி உள்ளது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தளபதி விஜய் தற்போது தமிழகத்தில் தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார். இவரது நடிப்பில் இனி படங்கள் உருவாகாது என்றும் அவரது 69-வது படமான ஜன நாயகன் தான் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள இறுதிப் படம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அப்படி இறுதிப் படம் என்று சொன்ன ஜன நாயகன் படமும் சென்சார் பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் போனது மேலும் மன வேதனையை அளித்தது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக இருந்த இந்தப் படம் தொடர்ந்து சென்சார் பிரச்சனை காரணமாக தற்போதுவரை வெளியாகாமலே உள்ளது. மேலும் தளபதி விஜய் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் சென்சார் வழங்கப்பட்டாலும் தேர்தல் முடியும் வரை ஜன நாயகன் படம் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் சூழலில் நேற்று 09-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தில் இருந்து சில காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலானது. அதனைப் பார்த்த படக்குழுவினர் பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜன நாயகன் பட காட்சிகளை சட்டவிரோதமாக பதிவிரக்கம் செய்யவோ, வெளியிடவோ கூடாது என்றும் எப்படி செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழு தற்போது நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
ஜனநாயகன் பட வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடிவடிக்கை பாயும்:
‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது கிளிப்களை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டொரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது என்பது ஒரு கடுமையான குற்றச் செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்குப் பொறுப்பாவார்கள் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் மூலமாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, பகிரவோ, பரப்பவோ கூடாது என்று அந்த நோட்டீஸ் மூலம் அறிவுறுத்தி உள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்… பிரச்சனையை முடிக்க முன்வந்த சிலம்பரசன்
வைரலாகும் ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நோட்டீஸ்:
#JanaNayagan Official Lawyer Statement pic.twitter.com/7UWqYUpyKw
— Movie Tamil (@_MovieTamil) April 10, 2026
Also Read… SJ Suryah: அந்த ரெண்டு காட்சிகள் LIK படத்தோட ஹைலைட்டாக இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!



