AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா… ஒரு ஆண்டை நிறைவு செய்தது குட் பேட் அக்லி படம்!

One Year Of Good Bad Ugly Movie: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்தது.

அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா… ஒரு ஆண்டை நிறைவு செய்தது குட் பேட் அக்லி படம்!
குட் பேட் அக்லிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Apr 2026 19:46 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் மிகப்பெரிய டானாக இருக்கிறார். இவருக்கு மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து இருந்தார். கணவர் பெரிய டானாக இருப்பதால் தனது குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டு என்று மனம் திருந்தி வாழ்கிறார் நடிகர் அஜித்.

இப்படி இருந்த சூழலில் தனது மகனை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதற்காக ஜெயிலில் இருந்து செல்லும் அஜித் குமாருக்கு பேரதிரிச்சி காத்திருக்கின்றது. தனது மகன் யாரோ பின்னிய சதி வலையில் சிக்கிக்கொட்ட நிலையில் அவரை காப்பாற்ற போராடுகிறார். தனது பழையப் பகை என்று நினைத்து தேடும் அஜித்திற்கு அது தன்னுடைய எதிரிகள் இல்லை தனது மனைவி த்ரிஷாவை பழிவாங்க நினைப்பவர்களின் சதி என்று புரிகிறது. இப்படி இருக்கும் சூழலில் அந்த பிரச்சனைகளை அஜித் குமார் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.

ஒரு ஆண்டை நிறைவு செய்தது குட் பேட் அக்லி படம்:

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் எர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டி நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… Raaka Movie: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ‘மேக் வே ஃபார் தி கிங்’ தீம் பாடல் வெளியானது!

ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:

Also Read… சீரியல் கில்லர் படத்தினை தயாரித்து நடிக்க இதுதான் காரணம் – மம்முட்டி சொன்ன விசயம்!

Follow Us