AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இப்படி ஒரு முதலமைச்சர் இருந்தா எப்படி இருக்கும்? ஓடிடியில் இந்த ஒன் படத்தை பார்த்து இருக்கீங்களா

One Movie OTT Update: மலையாள சினிமாவில் பொலிட்டிகள் ட்ராமாவாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஒன். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்த நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இப்படி ஒரு முதலமைச்சர் இருந்தா எப்படி இருக்கும்? ஓடிடியில் இந்த ஒன் படத்தை பார்த்து இருக்கீங்களா
ஒன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Apr 2026 22:00 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஒன். இந்தப் படத்தினை இயக்குநர் சந்தோஷ் விஸ்வநாத் இயக்கி இருந்த நிலையில் பாபி சஞ்சய் திரைக்கதையை எழுதி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மேத்யூ தாமஸ், ஜோஜு ஜார்ஜ், முரளி கோபி, சித்திக், இஷானி கிருஷ்ணா, காயத்ரி அருண், நிமிஷா சஜயன், மது, பாலச்சந்திர மேனன், ரஞ்சித், சங்கர் ராமகிருஷ்ணன், பினு பப்பு, மாமுக்கோயா, சலீம் குமார், ஜெகதீஷ், பிரேம் குமார், ரிசாபாவா, ஜெயன் சேர்த்தலா, சுதேவ் நாயர், சுதீர் கரமன, அலென்சியர் லே லோபஸ், கிருஷ்ணகுமார், முகுந்தன், ஜெயகிருஷ்ணன், அர்ச்சனா மனோஜ், ஸ்ரீஜா தாஸ், யாது கிருஷ்ணன், விவேக் கோபன், ஷிஜு, மேகநாதன், சுரேஷ் கிருஷ்ணா, பாலாஜி சர்மா, வி.கே பைஜு, சாதிக், பி.பாலச்சந்திரன், பிரசாந்த், பிரேம்ஜித் லால், நந்து, தினேஷ் பணிக்கர், நிஷாந்த் சாகர், அபு சலீம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான இச்சாய்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஸ்ரீ லக்‌ஷ்மி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி முதலமைச்சராக நடித்த ஒன் படம் எப்படி இருக்கும்?

இந்த ஒன் படத்தில் நடிகர் மம்முட்டி முதலமைச்சராக நடித்துள்ளார். முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அதே நேரத்தில் ஹோட்டலில் வேலை செய்யும் மேத்யூ தாமஸ் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படியான சூழலில் தந்தையை பார்ப்பதற்கக மேத்யூ தமாஸ் செல்லும் போது அவரை காவல்துறையினர் அடித்து வெளியே அனுப்புகின்றனர்.

இதனால் கடுப்பான மேத்யூ ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஓபன் செய்து அதில் அரசிற்கு எதிராகவும் மக்களை இப்படிதான் நடத்துவீர்களா என்றும் கேள்வி எழுப்பி பதிவை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து மேத்யூ தாமஸை நேரில் அழைத்து பேசுகிறார் முதலமைச்சர் மம்முட்டி. அதனைத் தொடர்ந்து இளைஞர்களை எப்படி கவர்வது மற்றும் 5 வருட ஆட்சி முடிவதற்கு முன்பு அந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மீது அதிருப்தி இருந்தால் மக்கள் அவரை மாற்ற ஒரு சட்டம் வேண்டும் என்று மம்முட்டி முயற்சிக்கிறார்.

Also Read… ரஜினி – கமல் இடையே இருக்கும் போட்டி எனக்கும் மோகன்லாலுக்கும் இடையே இல்லை – மம்முட்டி ஓபன் டாக்

மக்களுக்கான அரசியல் செய்ய நினைக்கும் அவரின் பணிகள் எப்படி மற்ற அரசியல்வாதிகளால் முறியடிக்கப்படுகின்றது என்பதை இந்தப் படத்தில் வெளிப்படையாக பேசியுள்ளனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சீமான் சாருக்கு இருக்குற அறிவு ரொம்ப அதிகம்.. அந்த விஷயத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் – பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

Follow Us