AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம் இதுதான் – மஞ்சு வாரியர் சொன்ன விசயம்

Manju Warrier Talks About Ajith Kumar: மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் அவ்வபோது மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம் இதுதான் – மஞ்சு வாரியர் சொன்ன விசயம்
மஞ்சு வாரியர் மற்றும் அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Apr 2026 14:10 PM IST

மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் கடந்த 1995-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பலப் படங்கள் மலையாள சினிமாவில் வெளியானது. கடந்த 2018-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் மட்டுமே படங்களில் நடித்து வந்த நடிகை மஞ்சு வாரியர் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அசுரன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இவர் தமிழில் அறிமுகம் ஆன இந்த முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் அடுத்தடுத்து துணிவு, வேட்டையன், விடுதலை பாகம் 2 ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மஞ்சு வாரியர் நடித்த மிஸ்டர் எக்ஸ் என்ற படம் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் அஜித் குறித்தும் பைக் ரேசிங் குறித்தும் பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் பைக் ஓட்டும்போது அஜித் சார் எனக்கு சொல்லிகொடுத்த முதல் பாடம்:

அஜித் குமார் சாருடனான அந்தப் பயணம் எனக்குக் கண்களைத் திறப்பதாக அமைந்தது.. நான் லடாக்கில் அவருடன் இணைந்துகொண்டு, 14 நாட்கள் நீடித்த ஒரு இருசக்கர வாகனப் பயணத்தை மேற்கொண்டேன். விபத்து ஏதேனும் நேரிட்டால், அதிலிருந்து நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதைத்தான் திரு. அஜித் குமார் அவர்கள் எனக்கு முதலில் கற்றுக்கொடுத்தார். எனக்கு வாகனம் ஓட்டத் தெரியும் என்றாலும், என்னிடம் அதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் தொழில்முறை வாகன ஓட்டிகள் அடங்கிய ஒரு குழுவாக இருந்தனர்; அவர்களுடன் இணைந்து பயணிப்பதும், அந்தச் சூழலைக் கையாள்வதும் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அந்தப் பயணம் நிறைவடைந்த பிறகு, நான் எனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ரஜினி – கமல் இடையே இருக்கும் போட்டி எனக்கும் மோகன்லாலுக்கும் இடையே இல்லை – மம்முட்டி ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் மஞ்சு வாரியரின் பேச்சு:

Also Read… சீமான் சாருக்கு இருக்குற அறிவு ரொம்ப அதிகம்.. அந்த விஷயத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் – பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

Follow Us