AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஃபேமிலி செண்டிமெண்ட் படம் பார்க்கணுமா? நடிகர்கள் பிஜூ மேனன் – மஞ்சு வாரியர் நடிப்பில் இந்த லலிதம் சுந்தரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Lalitham Sundaram Movie OTT Update: மலையாள சினிமாவில் ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் லலிதம் சுந்தரம். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

ஃபேமிலி செண்டிமெண்ட் படம் பார்க்கணுமா? நடிகர்கள் பிஜூ மேனன் – மஞ்சு வாரியர் நடிப்பில் இந்த லலிதம் சுந்தரம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
லலிதம் சுந்தரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Mar 2026 19:00 PM IST

மலையாள சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெறும் நடிகர்களாக வலம் வருகிறார்கள் நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் மஞ்சு வாரியர். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து மலையாள சினிமாவில் வெளியான படம் லலிதம் சுந்தரம். ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் காமெடி ட்ராமாவாக உருவான இந்த லலிதம் சுந்தரம் படம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் மது வாரியர் இயக்கி இருந்த நிலையில் பிரமோத் மோகன் திரையக்கதையை எழுதி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி நடிகர்கள் பிஜு மேனன், மஞ்சு வாரியர், அனு மோகன், ரகுநாத் பலேரி, சைஜு குருப், தீப்தி சதி, சுதீஷ், ரம்யா நம்பீசன், ஜரீனா வஹாப், மது வாரியர், நந்து, வினோத் தாமஸ், அஞ்சனா அப்புக்குட்டன், தென்னல் அபிலாஷ், அஸ்வின் வாரியர், அம்பிகா மோகன், ஆஷா அரவிந்த், குமார் சேது என பலர் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… வடம் முதல் காதல் ரீசெட் ரிப்பீட் வரை… இந்த வாரம் எந்தப் படத்தை முதலில் தியேட்டரில் பார்ப்பீங்க?

லலிதம் சுந்தரம் படத்தின் கதை என்ன?

பிஜு மேனன், மஞ்சு வாரியர், அனு மோகன் ஆகிய மூன்று பேறும் ஒன்றாக பிறந்தவர்கள். தொடர்ந்து தங்களது வாழ்க்கைப் பயண ஓட்டத்தில் குடும்பமாக வாழத் தவறவிட்டார்கள். இப்படி இருக்கும் சூழலில் அவர்கள் மூன்று பேறும் தங்களது அம்மாவின் நினைவு நாளிற்காக ஊரில் ஒன்றாக இணைகிறார்கள். அப்படி இணையும் போது அவர்களின் இடையே ஏற்படும் பாசம், கொண்டாட்டம், மற்றும் காமெடி ஆகியவையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி இருந்த நிலையில் படத்தினை மிஸ் செய்யாமல் பாருங்க.

Also Read… Selvaraghavan: உண்மை கதையில்… செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டீசர் வெளியானது!

Follow Us