AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வடம் முதல் காதல் ரீசெட் ரிப்பீட் வரை… இந்த வாரம் எந்தப் படத்தை முதலில் தியேட்டரில் பார்ப்பீங்க?

This Week Theatre Release Tamil Movies Lis Here: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் தற்போது பார்க்கலாம்.

வடம் முதல் காதல் ரீசெட் ரிப்பீட் வரை… இந்த வாரம் எந்தப் படத்தை முதலில் தியேட்டரில் பார்ப்பீங்க?
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Mar 2026 18:50 PM IST

வடம்: நடிகர் விமல் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் படங்களில் மட்டும் இன்றி தொடர்ந்து இணையதள தொடர்கலிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வடம். இந்தப் படத்தை இயக்குநர் கேந்திரன் வி  எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ஜல்லிக்கட்டிப் போட்டியையும் அதனால் ஏற்பட்ட பகையையும் மையமாக வைத்து உருவாகி உள்ளது என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் விமல் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் நாளை மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திடையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்தபா முஸ்தபா: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் சதீஸ். அதன்படி சதீஸ் தற்போது கதையின் நாயகனாக நடித்து உள்ள படம் முஸ்தபா முஸ்தபா. இந்தப் படத்தில் நடிகர் சதீஸ் உடன் இணைந்து நடிகர்கள் சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி சாணக்யன், ஜாவா சுந்தரேசன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படம் நாளை மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திடையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Ken Karunas: யூத் பட கதை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா என்னை ஹீரோவா ஏற்றுக்கொள்ளல – கென் கருணாஸ் வேதனை!

ஓ பட்டர்ஃபிளை: தமிழ் சினிமாவில் நடிகை நிவேதிதா சதீஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் ஓ பட்டர்ஃபிளை. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகை நிவேதிதா சதீஷ் உடன் இணைந்து நடிகர்கள் சிபி, நாசர், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, கீதா கைலாசம், அத்துல் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திடையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல் ரீசெட் ரிப்பீட்: இயக்குநர் விஜய் எழுதி இயக்கி உள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இந்தப் படத்தில் நடிகர் மதுமகேஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திடையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

Follow Us