AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: சூப்பர் ஸ்டாரை முதல் முறை பார்த்த தருணம்.. அவரை பார்க்கும்போது உறைந்து போய்ட்டேன் – சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!

SK Recalls First Meet with Rajinikanth: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழில் பிரபலமாகிவரும் நடிகர்களில் ஒருவர். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை முதல் முறையாக நேரடியாக சந்தித்த தருணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan: சூப்பர் ஸ்டாரை முதல் முறை பார்த்த தருணம்.. அவரை பார்க்கும்போது உறைந்து போய்ட்டேன் – சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!
சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Mar 2026 08:47 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த நிலையில், டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த திரைப்படம், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் இப்படம் வசூல் ரீதியாக சரிவை சந்தித்திருந்தது. இப்படத்தை அடுத்தாக தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில், சேயோன் (Seyon) என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், தனது வாழ்க்கையில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை (Superstar Rajinikanth) நேரில் சந்தித்த தருணம் எப்படி இருந்தது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார் அது பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: STR51-ல் சந்தானம் இருக்காரு.. படத்தின் மைய கருத்து இதுதான் – அஷ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த தருணம் பற்றி சிவகார்த்திகேயன் பேச்சு:

அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன், “ரஜினி சாரை பார்க்கபோகிறேன் என தெரிந்தேத்தும், பூக்கடைக்கு சென்று ஒவ்வுறு பூவாக வாடாமல், நானே எனது கையால் தேர்ந்தெடுத்து போக்கே செய்ய சொன்னேன். அதை எடுத்துக்கொண்டு சூப்பர் ஸ்டாரை பார்க்க சென்றிருந்தேன். அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேம் எனக்கு கால் பண்ணி, ” சார் இன்னிக்கி கொஞ்சம் பிசியாக இருக்கிறார், அவரை பார்க்குறது கொஞ்சம் கஷ்டம்-னு” சொன்னாங்க. உடனே அவரிடம், “மேடம் நான் சாயிந்திறம் 6:30 மணியிலிருந்து காத்திருக்கிறேன், நீங்க சொன்னிங்கன்னா 1 நிமிடத்தில் சாரை பார்த்துவிட்டு சென்றுவிடுவேன்” என சொன்னேன்.

இதையும் படிங்க: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!

அப்போது மேடம், “உடனே வாங்க என சொன்னாங்க”. உடனே நாங்களும் ரஜினி சாரை பார்ப்பதற்காக சென்றுவிட்டோம். நான் அப்படியே உறைஞ்சி நின்னுட்டேன். உண்மையிலே ரஜினிகாந்த் சாரை தான் பார்க்கப்போகிறோமா? என யோசிச்சிகிட்டே இருந்தேன். அவர் வீட்டின் ஹாலில் உட்காந்திருந்தேன், கொஞ்ச நேரத்தில் டென்ஷன் ஆக ஆரமிச்சிருச்சி. நான் எனது மனதில் கடவுளை தரிசிக்கப்போகிறேன் என நினைத்துக்கொண்டேன். அப்போ ஐஸ்வர்யா மேம் வந்து என்னிடம், “உள்ள வாங்க சிவா-னு கூப்பிட்டாங்க”. திடீரெனெ ரஜினிகாந்த சார் கண்முன்னே வந்து, “ஹேய் சிவா-னு” சொன்னாரு அவ்ளோதான் என சிவகார்த்திகேயன் பகிர்ந்திருந்தார்.

Follow Us