AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

Ajith Kumars Dare Devil Movie Shooting Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
டேர் டெவில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2026 19:04 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இதுவரை நடிகர் அஜித் குமார் நடிப்பில் 63 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் பலப் படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக உள்ள நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருந்தார். நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகராக இவர் அவரது முந்தையப் படங்களின் பல மாஸ் காட்சிகளை இந்தப் படத்தில் ரீ கிரியேட் செய்து இருந்தார்.

இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் தனது அடுத்தப் படத்திற்கும் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாகவே வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?

இந்த நிலையில் நேற்று படத்தின் டைட்டில் மற்றும் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்தப் படத்திற்கு டேர் டெவில் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார் என்று தெரிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படம் ஒரு பயோ பிக் கதையாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… அன்னா பென்னின் இந்த சாரா’ஸ் படத்தை பார்த்துருக்கீங்களா? இல்லனா மிஸ் பண்ணாம பருங்க

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jyotika: பிறக்கும்போதே சமத்துவத்தை மனதில் கொண்டவர் – சூர்யா குறித்து பகிர்ந்த ஜோதிகா!

Follow Us