Jyotika: பிறக்கும்போதே சமத்துவத்தை மனதில் கொண்டவர் – சூர்யா குறித்து பகிர்ந்த ஜோதிகா!
Jyothika on Suriyas Support: இந்தி சினிமாவில் தற்போது லீட் நாயகியாக இருந்துவருபவர் ஜோதிகா. இவர் சமீபகாலமாக முழுக்க இந்தி சினிமாவில் நடித்துவருகிறார். அண்மையில் ஆங்கில பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் கலந்துகொண்டிருந்தனர். அதில் பேசிய ஜோதிகா, சூர்யாவின் மனநிலை கொண்டவர் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவந்தவர் ஜோதிகா (Jyotika). இவர் தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் உடன்பிறப்பே (Udanpirappe). இந்த படத்தை இயக்குநர் இரா.சரவணன் இயக்க, கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படத்திற்கு பின் ஜோதிகா தமிழில் எந்த படங்களிலும் நடக்கவில்லை. தற்போது இவர் முழுக்க இந்தி சினிமாவின் பக்கத்தில் சென்றுவிட்டார். இவர் தற்போது முழுமையாக ஹைதராபாத்தில் செட்டிலான நிலையில், முழுக்க இந்தி சினிமாவின் பக்கம் சென்றுவிட்டார். இவர் இறுதியாக சிஸ்டம் (System) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்திருந்த நிலையில், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது முழுக்க இந்தி மொழியில் எடுக்கப்பட்டாலும், மாற்றமொழிகளிலும் டப் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் சூர்யா (Suriya) மற்றும் ஜோதிகா இருவருமே ஒரு ஆங்கில பத்திரிகை நேர்காணலில் கலந்துகொண்டனர். அந்த நேர்காணலில் பேசிய ஜோதிகா, சூர்யாவின் சமத்துவம் மனம் மற்றும் அவர் படங்களில் நடிக்க கொடுக்கும் க்ரீன் சிக்னல் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் டியூரேஷன் கம்மியா இருந்துருக்கலாம் நினைக்கிறீங்களா? இயக்குநர் எச்.வினோத் விளக்கம்
சூர்யா குறித்து நேர்காணலில் கலகலப்பாக பேசிய நடிகை ஜோதிகா :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஜோதிகாவிடம், “சூர்யா எப்போதுமே ஒரு கிரீன் ஃபிளாக் ஆள்தானா?” என கேள்வி கேட்டார், அதற்கு பதிலளித்த ஜோதிகா, “நான் உன்னைப் பற்றி ஒன்று பேசட்டுமா சூர்யா. ஆமாம், அவர் எல்லா விதத்திலும் குறிப்பிடத்தக்கவர். அவர் பிறக்கும்போதே சமத்துவத்தை மனதில் கொண்டவர். நான் இங்கே பெண்ணியவாதியாகப் பேச முயற்சிக்கவில்லை” என சொன்னார்.
இதையும் படிங்க: அன்னா பென்னின் இந்த சாரா’ஸ் படத்தை பார்த்துருக்கீங்களா? இல்லனா மிஸ் பண்ணாம பருங்க
உடனே அதற்கு சூர்யா, “சூழல்தான் என்னை மாற்றியது என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார். மேலும் பேசிய ஜோதிகா, “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், அது அவருடைய டிஎன்ஏ-வின் ஒரு பகுதி. அது நீ மட்டும்தான். நீ சூழலுக்கு நேர் எதிரானவன் என்று நான் நினைக்கிறேன்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா குறித்து ஜோதிகா பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
Anupama: Is always #Suriya a Green flag material❓#Jyothika: Let me talk something about you #Suriya😀. Yes he is remarkable in every aspect. He born with equality in his head. I’m not trying to be faminist here#Suriya: I think environment changed me😅#Jyotika: i won’t…
— AmuthaBharathi (@CinemaWithAB) August 3, 2026
சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2006ம் ஆண்டில் இவர்கள் இருவருமே பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்த நிலையில், இந்த 2026ம் ஆண்டோடு சுமார் 20 வருட இல்லற வாழ்க்கையை கழித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.