அக்கா அம்பிகா மீது மோசடி புகார் அளித்த நடிகை ராதா – என்ன நடந்தது?
Actress Radha file case against actress Ambika | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா. இவர்கள் இருவரும் அக்கா தங்கையாவர். இந்த நிலையில் அக்கா அம்பிகா மீது தங்கை ராதா மோசடி புகார் அளித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக 80 மற்றும் 90களில் கொடிக்கட்டிப் பறந்தவர்கள் நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா. இவர்கள் இருவரும் அக்கா தங்கையாவர். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர்கள் பல ஹிட் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 1981-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான் அழைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ராதா. ஆனால் அம்பிகா மலையாள சினிமாவில் குழந்தையாக இருக்கும் போதே தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இருவரும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராதா இந்தி மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகா சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருவது போல ராதா சின்னத்திரையில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அம்பிகா அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அம்பிகா மீது அவரது தங்கை நடிகை ராதா மோசடி புகார் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Also Read… இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திர வீடியோ




அக்கா அம்பிகா மீது மோசடி புகார் அளித்த நடிகை ராதா:
அதன்படி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது செக் மோசரி வழக்கை பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது. அதன்படி அவர் அளித்தப் புகாரில் ஒரே வீட்டில் இருந்த போது ராதாவின் 5 செக்குகளை அவரது சகோதரி மற்றும் சகோதரர் இருவரும் இணைந்து மோசடி செய்துள்ளதை அறிந்து வங்கி கணக்கை சோதனை செய்துள்ளார் ராதா. அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 46 கோடிகள் மோசடி செய்ததை அவர் அறிந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ராதா தனது சகோதரி மற்றும் சகோதரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அதுகுறித்து தற்போது விசாரணை நடைப்பெற்று வருகின்றது.
Also Read… புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள் – கொடி அறிமுகம்