கல்யாணம்ன்றது 2 பேர் மனசு சம்மந்தப்பட்டது… ஓடிடியில் வெளியாகி உள்ள மொத ராத்திர படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Modha Rathri Movie OTT Review Here | நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மொத ராத்திரி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மொத ராத்திரி. இந்தப் படத்தினை இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இயக்குநர் ராஜா கருப்பசாமி இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாகவும் நடிகை அனிஷ்மா அனில்குமார் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி நடிகர்கள் ஷெல்லி கிஷோர், சேத்தன், பகவதி பெருமாள், ஏ.வெங்கடேஷ், அப்துல் லீ, சங்கீதா பாலன், பானு பிரியா, சுமித்ரா தேவி எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன் டி.கே. வேலன், கௌஷிக் கபிலன், ராஜா கருப்பசாமி, திலீபன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.ஜி.ராஜவேல் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ஓடிடியில் வெளியாகி உள்ள மொத ராத்திர படம் எப்படி இருக்கு?
திருமணத்தில் விருப்பமே இல்லாத நாயகன் ரிஷிகாந்த் மற்றும் நாயகி அனிஷ்மா அனில்குமார் இருவருக்கும் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணத்தில் இருந்து தப்பித்து தனது காதலனுடன் செல்ல நினைக்கிறார். அதே வேலையில் காதல் தோல்வியில் இருக்கும் ரிஷிகாந்த் இந்த திருமண வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.




Also Read… பகலவன் படத்தை அந்த நடிகரை வைத்து இயக்க நினைத்தேன் – சீமான் சொன்ன விசயம்
இப்படி இருக்கும் நிலையில் முதலிரவு அப்போது அனிஷ்மா வீட்டை விட்டு ஓட முயற்சிப்பதை நாயகன் ரிஷிகாந்த் பார்த்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து தனது காதல் வாழ்க்கை குறித்து அனிஷ்மா கூற முதலில் கோபமடைந்த ரிஷிகாந்த் பிறகு அவருக்கு உதவ நினைக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது இணைந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… முனியம்மாவால் முட்டிபோட்டு நடக்கும் வினோத் பாபு.. என்ன நடக்குது பிக்பாஸில்…?