கொளத்தூர் மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் பேச்சால் பரபரப்பு
DMK Mupperum Vizha : திமுக முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்த்திருப்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமையை எல்லாமல் பார்க்காமல் இருந்ததற்கு. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று தெரிவித்தார்.
சென்னை, செப்டம்பர் 19 : கடந்த செப்டம்பர் 15, 2026 அன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உடல் நலக்குறைவு காரணாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 19, 2026 அன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்த்திருப்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமையை எல்லாமல் பார்க்காமல் இருந்ததற்கு. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று தெரிவித்தார்.
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்
திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 19, 2026 இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. இதனையடுத்து நிகழ்வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு என்றார்.




இதையும் படிக்க : ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!
மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? அப்படின்னு மேடையில கத்தினாரு. இப்போ தமிழ்நாட்டு மக்கள் அவரை பார்த்து, கேக்குறாங்க சிஎம் சார் இந்தியாவிலிருக்கிற கம்பெனிக்கு எதுக்கு லண்டன்ல போய் கையெழுத்து போடுறீங்க?” அப்படின்னு சத்தமா கேட்கிறாங்க.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்… pic.twitter.com/6seVqbuphi
— DMK (@arivalayam) September 19, 2026
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்கூட கிடைக்கவில்லை ஆனால் ஏதோ பெரிய அலை அடித்த மாதிரியும்., தமிழ்நாடே அவர்கள் வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்டப் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்க வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம். சீக்கிரம் வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல் என்றார்.
இதையும் படிக்க : “தலித் மாணவர்கள் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது!”.. அமைச்சர் வன்னியரசு பகீர் குற்றச்சாட்டு!!
தமிழக சட்டமன்றத்தில் மிசா குறித்து முதல்வர் விஜய் பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், என்னுடைய மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை. பேரவையில் எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளை டைவர்ட் செய்ய அவதூறுகளை பரப்புகிறது தவெக அரசு. கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்த்திருப்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமையை எல்லாமல் பார்க்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்றார்.