AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather now : உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

Tamil Nadu weather today : மகாராஷ்டிராவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tamil Nadu Weather now : உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2026 15:03 PM IST

சென்னை, செப்டம்பர் 19 : மகாராஷ்டிராவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் செப்டம்பர் 19, 2026 இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “தலித் மாணவர்கள் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது!”.. அமைச்சர் வன்னியரசு பகீர் குற்றச்சாட்டு!!

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் செப்டம்பர் 19, 2026 இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20, 2026 மற்றும் செப்டம்பர் 21. 2026 2 நாட்கள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. போயஸ் கார்டனில் மாதம் ரூ.2 லட்சம் வாடகைக்கு பங்களா? வீரமணி வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

அதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செப்டம்பர் 19, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Follow Us