கள்ளக்காதலை கண்டித்த தங்கை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்த போட்டுத் தள்ளிய அக்கா.. கரூரில் பயங்கரம்!
Karur Murder : கரூர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தங்கையை அவரது அக்காள் மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய சம்பவமும், அவர்கள் நாடகம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரு கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு வினோதினி ( 21 வயது), தர்ஷினி ( 17 வயது) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில், வினோதினி வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். 2- ஆவது மகள் தர்ஷினி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இது தொடர்பாக ரமேஷ் குமார் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாணவியை போலீசார் தேடி வந்தனர். இதில், வினோதினியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதே போல, அவரது குடும்பத்தினரின் செல்போன்களையும் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அக்காவின் கள்ளக்காதலை கண்டித்த தங்கை
இதில், வினோதினி இளைஞர் ஒருவருடன் பழகி வந்தது தெரிய வந்தது. அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், வினோதினி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த அவரது தங்கை தர்ஷினி கண்டித்துள்ளார். இந்த தவறான பழக்கத்தை கைவிட்டுவிடுமாறும், இல்லையெனில் உனது தொடர்பு பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார். இதை கேட்ட, வினோதினி கடும் ஆத்திரம் அடைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க: மதுரையில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு.. அரசு பள்ளி பின்புறம் கிடந்த இளைஞர் சடலம்.. பரபரக்கும் பின்னணி!




கள்ளக்காதலனுடன் சேர்ந்த தங்கையை கொன்ற அக்காள்
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக தனது கள்ளக்காதலன் மோகன்ராஜ் என்பவரிடம் வினோதினி தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ் மற்றும் வினோதினி ஆகியோர் சேர்ந்து, தர்ஷினியை அழைத்து சென்று கொடூரமான முறையில் கொலை செய்து நாடகம் ஆடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மோகன்ராஜ் மற்றும் வினோதினி ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோகன்ராஜ் என்பவர் கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் காலனி பகுதியில் சேர்ந்தவர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை
இவரும், வினோதினியும் செல்போனில் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததுடன், தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷயம் தர்ஷினிக்கு தெரிய வந்த பின்னர், இருவரும் செல்போனில் பேசுவதிலும், அடிக்கடி நேரில் சந்திப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, உடன் பிறந்த தங்கை என்றும் பாராமல் வினோதினி மற்றும் அவரது கள்ளக்காதலன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை சம்பவம்.. ரூ.20 ஆயிரத்தை எடுத்ததால் கொன்றேன்.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!