பிக் பாஸில் லட்சுமி பிரியா மற்றும் சாந்தினியுடன் மூடும் பகை – வைரலாகும் புரோமோ!
Bigg Boss Tamil S10: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 11 நாட்களான நிலையில், தற்போதிலிருந்தே போட்டியாளர்கள் மற்றும் வீட்டின் தலைவர் மத்தியில் பகை இருந்துவருகிறது. இன்று (17/09/2026) வெளியான 3வது புரோமோவில் லட்சுமி பிரியா மற்றும் சாந்தினியுடன் ஏற்படும் சண்டை தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.
தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் இந்த நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், பிளாக் பாண்டி வெளியேறிவிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஆனந்தி மற்றும் மணிவண்ணன் போன்ற போட்டியாளார்கள் நுழைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 2 வாரங்களே ஆனா நிலையில், பல விமர்சனங்களை பெற்றுவருகிறது. விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மீதும் பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விதத்தில் இன்றுடன் (17/09/2026) இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 11 நாட்களை கடந்துள்ளது.
அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின்மீது பல எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. இந்த வீட்டில் வீட்டின் தலைவர் மீதே சக போட்டியாளர்கள் தங்களின் வன்மத்தையும், தனது கோபத்தையும் காட்டிவந்தனர். அந்த விதத்தில் இன்று வெளியான 3வது புரோமோவில் சாந்தினி (Chandhini) மற்றும் லட்சுமி பிரியா (Lakshmi Priya) இருவருக்குள்ளும் ஏற்பட்டும் தள்ளுமுள்ளு குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை.. ராஷ்மிகா பற்றி பேசிய கமல்ஹாசன்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 11வது நாளின் 3வது புரோமோ:
#Day11 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/6fV4Hpymaq
— Vijay Television (@vijaytelevision) September 17, 2026
இந்த புரோமோவில், சாந்தினி, கிச்சனில் வேலைபார்க்கும் லட்சுமி பிரியாவிடம் சாப்பாடு இருக்கிறதா? என கேட்டிருந்தார். அதற்கு லட்சுமி பிரியா செய்த செய்கை சாந்தினியை கோபப்படுத்தியது. இதனால அதிகமாக கோவமான சாந்தினி, லட்சுமி பிரியாவிடம் எதிர்த்து பேச தொடங்கியிருந்தார். இதை பொறுத்துக்கொள்ளாத லட்சுமி பிரியா, சக போட்டியாளர்களிடம் சாந்தினியை பற்றி நக்கலாக பேசியிருந்தார். இதுக்கா தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: நாளை ஓடிடியில் வெளியாகும் மொத ராத்திரி படம் – வைரலாகும் அப்டேட்
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வெளியான முதல் நாளிலிருந்தே பெரும்விமர்சனங்களுடன் வெளியாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் 2வது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த ஆனந்தி, வந்த முதல் நாளிலே சக போட்டியாளர்களிடம் சண்டையை ஆரம்பித்தார். சமீபத்தில் நடந்த டாஸ்கில், லட்சுமி பிரியாவுடன் அடிப்புடி சண்டையில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறாக பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் இந்த நிகழ்ச்சியானது வெளியாகிவருகிறது.