பகலவன் படத்தை அந்த நடிகரை வைத்து இயக்க நினைத்தேன் – சீமான் சொன்ன விசயம்
Seeman recent interview viral on social media | தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி நடிகராக பலப் படங்களில் நடித்தவர் சீமான். இவர் தற்போது தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்கி தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்துவது மட்டும் இன்றி அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் சீமான். முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தினை இயக்கினார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் சீமான். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மக்களிடையே கவனத்தை ஈர்த்த இவர் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இனியவளே, வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துகள் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் படங்களை இயக்கவில்லை. மேலும் கடந்த 2023-ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை.
தொடர்ந்து தமிழ் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




பகலவன் படத்தை அந்த நடிகரை வைத்து இயக்க நினைத்தேன்:
இந்த நிலையில் சமீபத்தில் சீமான் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, சிலம்பரசனை வைத்து பகலவன் என்ற படத்தை இயக்கவிருந்தேன். அந்தத் திட்டத்தில் நடிக்கப் பல நடிகர்களும் தயக்கம் காட்டிய நிலையில், சிலம்பரசன் டிஆர் மட்டும் மிகுந்த நம்பிக்கையுடன் அதில் நடிக்க முன்வந்தார். தயாரிப்பாளரும் கூடத் தயங்கியதால், இறுதியில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சிம்புவின் வளர்ச்சியின் மீது எனக்கு மிகுந்த பாசமும் அக்கறையும் உண்டு. அவர் ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர் என்று சீமான் பாராட்டியுள்ளார்.
Also Read… இந்தப் படத்தின் மூலம் அனிருத்தின் இசைப் பயணம் மாறும் – நடிகர் கமல் ஹாசன்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“I was supposed to direct #Pakalavan with #STR. Every actor was scared to act in that project, but #SilambarasanTR confidently wanted to do the film. Even the producer got scared, and eventually, the project was shelved. I’m very affectionate and concerned about #Simbu’s growth.…
— Movies Singapore (@MoviesSingapore) September 16, 2026
Also Read… பிக்பாஸ் தமிழில் கேப்டன் மீது அதிருப்தியில் இருக்கும் போட்டியாளர்கள் – வைரலாகும் தகவல்